சிக்கன இட வசதி கொண்ட நவீன குடியிருப்புகள்


சிக்கன இட வசதி கொண்ட நவீன குடியிருப்புகள்
x
தினத்தந்தி 23 Feb 2019 7:48 AM GMT (Updated: 23 Feb 2019 7:48 AM GMT)

இன்றைய அடுக்குமாடி குடியிருப்புகள் நகர்ப்புற இட நெருக்கடிக்கு தக்கவாறு புதுமையாகவும், சிக்கனமாகவும் மாறி வருகின்றன.

ன்றைய அடுக்குமாடி குடியிருப்புகள் நகர்ப்புற இட நெருக்கடிக்கு தக்கவாறு புதுமையாகவும், சிக்கனமாகவும் மாறி வருகின்றன. வளர்ந்த உலக நாடுகளில் எபிஸியன்சி அபார்ட்மெண்டு (Efficiency Apartment) , மைக்ரோ அபார்ட்மெண்டு (Micro Apartment) மற்றும் ஸ்டுடியோ அபார்ட்மெண்டு (Studio Apartment) போன்ற அடுக்குமாடி வகைகள் மக்களுக்கான குடியிருப்பு தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றன. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் மேற்கண்ட நவீன குடியிருப்புகள் பெருநகரங்களில் ஆங்காங்கே அறிமுகமாகி வருகின்றன.

மேற்கத்திய முறை

மேற்குறிப்பிட்ட குடியிருப்புகள் மேற்கத்திய முறையிலான கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டவை. அதாவது, மேலை நாடுகளில் கூட்டுக்குடும்ப முறையல்லாத ஒற்றை நபர் அல்லது இரு நபர்கள் வசிக்கும் வீடுகள் அதிகம். இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் கூட்டு குடும்ப முறை வழக்கத்தில் இருப்பதன் அடிப்படையில் வீடுகள் பெரிதாக அமைக்கப்படுகின்றன.

தொழில்நுட்ப தீர்வு

தற்போதைய நாகரிக வளர்ச்சி காரணமாக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களில் இட நெருக்கடி காரணமாக மனையிடங்களின் மதிப்பு அதிகமாகி விட்டது. அதன் விளைவாக ‘வெர்டிகல் டெவலப்மெண்டு’ எனப்படும் உயரவாக்கில் குடியிருப்புகளின் வளர்ச்சி அமைவதுதான் அதற்கான தொழில்நுட்ப தீர்வாக அமைந்தது.

குட்டி அபார்ட்மெண்டு வகைகள்

மேற்கண்ட நவீன வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் 300 அல்லது 500 சதுர அடி அளவுக்குள் பெட் ரூம், கிச்சன் மற்றும் பாத்ரூம் ஆகியவை உள்ளடங்கிய ஸ்டுடியோ அபார்ட்மெண்டு டைப் குடியிருப்புகளாக அமை க்கப்பட்டன. தென்னிந்திய நகரங்களில் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய பெரு நகரங்களில் இவ்வகை குட்டி அபார்ட்மெண்டுகள் பல இடங்களில் இருப்பது அறியப்பட்டுள்ளது.

ஸ்டுடியோ அபார்ட்மெண்டு மட்டுமல்லாமல் எபிஸியன்சி மற்றும் மைக்ரோ அபார்ட்மெண்டு வகை குடியிருப்புகளும் தற்போது மெட்ரோ நகரங்களில் அறிமுகமாகி வருகின்றன. இவ்வகை மூன்று நவீன குடியிருப்புகள் பற்றிய பொதுவான தகவல்களை இங்கே காணலாம்.

‘ஸ்டுடியோ அபார்ட்மெண்டு’

நான்கு சுவர்களுக்குள் வேண்டிய வசதிகளை அமைத்துக்கொள்ளும் வகையில் கிட்டத்தட்ட 500 சதுர அடிகளுக்கு உட்பட்ட அளவில் இந்த குடியிருப்பு வடிவமைக்கப்படுகிறது. பாத்ரூம் உள்ளடக்கமாக இருக்கும் நிலையில் இடையில் வேறு குறுக்கு சுவர்களும் அமைக்கப்படுவதில்லை. அதனால் வாடகைக்கு வருபவர்கள் அவர்களது விருப்பத்திற்கேற்ப ‘பார்ட்டிஷன்’ சுவர்களை ரெடிமேடாக அமைத்து வேண்டியவாறு இடத்தை பிரித்து பயன்ப டுத்திக்கொள்ளலாம்.

‘எபிசியன்ஸி அபார்ட்மெண்டு’

இவ்வகை குடியிருப்புகள் ஹால் மற்றும் பெட்ரூம் அறைகளுடன் கச்சிதமான சமையலறை மற்றும் உணவு அறை ஆகியவையும் கொண்டதாக இருக்கும். இந்த கட்டமைப்புகள் அனைத்தும் 500 சதுர அடி என்ற அளவுக்கு மிகாமல் அமைக்கப்படுவது வழக்கம்.

‘மைக்ரோ அபார்ட்மெண்டு’

பெயருக்கு ஏற்றவாறு சிறிய அளவுள்ள குடியிருப்பு இதுவாகும். குறிப்பாக, 300 சதுர அடிகளுக்குள் இதன் மொத்த வசதிகளும் அடங்கியிருக்கும். உறங்குவதற்கான தனி இடமும், சமையல், பாத்ரூம் உள்ளிட்ட இதர வசதிகள் மீதமுள்ள இடத்திலும் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் அல்லது இருவர் வாழ்வதற்கான குடியிருப்பாக உள்ள இந்த அமைப்பு அதன் ‘பிரைவசி’ காரணமாக மக்கள் நெரிசல் மிகுந்த பல மேல்நாட்டு நகரங்களில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேற்கண்ட மூன்று குடியிருப்புகளும் 285 முதல் 450 அல்லது 500 சதுர அடி என்ற அளவுகளுக்குள் இருக்கலாம் என்பது பொதுவான நடைமுறையாக உள்ளது.

Next Story