கழிவறை அமைப்பில் நவீன தொழில்நுட்பம்


கழிவறை அமைப்பில் நவீன தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 23 Feb 2019 3:38 PM IST (Updated: 23 Feb 2019 3:38 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புறங்களின் நெருக்கடியான பகுதிகளில் உள்ள தனி வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் ஏற்படும் சிக்கல்களில் ஒன்று செப்டிக் டேங்க் சம்பந்தமானது.

கர்ப்புறங்களின் நெருக்கடியான பகுதிகளில் உள்ள தனி வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் ஏற்படும் சிக்கல்களில் ஒன்று செப்டிக் டேங்க் சம்பந்தமானது. பொதுவாக, கழிவறையிலிருந்து வெளியாகும் தண்ணீர் வீட்டின் பின்புறத்தில் நிலத்தடியில் உள்ள செப்டிக் டேங்கில் சென்று தேங்கும் வகையில் இருக்கும். எதிர்பாராத சில சந்தர்ப்பங்களில் கழிவுகள் முழுவதுமாக மக்கிப் போகாமல் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி வெளிப்புறமாக கசியவும் வ ாய்ப்புகள் உள்ளன.

‘பயோ டைஜஸ்டர்’ முறை

அந்த நிலையில் தக்க முறையில் கசிவு சரி செய்யப்படாவிட்டால், சுகாதாரமான வீட்டு சூழல் பாதிக்கப்படும். குறிப்பாக, வீட்டில் உள்ள செப்டிக் டேங்க் அமைப்புகள் மாநகராட்சியின் பிரதான சாக்கடை குழாயுடன் முறையாக இணைக் கப்படாமல் இருக்கும் பட்சத்தில் பாதிப்புகள் அதிகமாகலாம். இத்தகைய குறைகளை நிவர்த்தி செய்யவும், பொது சுகாதாரத்தை பராமரிக்கவும் பயோடைஜஸ்டர் (Biodigester Septic Tanks) என்ற ப ாக்டீரியா சுத்திகரிப்பு முறை ஏற்றது என்று அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காற்றோட்டம் வேண்டியதில்லை

மேற்கண்ட பயோ டைஜஸ்டர் முறையில் பழைய செப்டிக் டேங்க் அகற்றப்பட்டு காற்றோட்டம் இல்லாத வகையில் செயல்படும் புதிய டேங்க் பொருத்தப்படுகிறது. அதில் 30 சதவிகித அளவுக்கு ஒரு வகை பாக்டீரியாக்கள் நிரப்பப்படும். அந்த நுண்ணுயிர்கள் காற்றோட்டம் இல்லாத சூழ்நிலையில் 6 அல்லது 8 மணி நேர கால அவக ாசத்துக்குள் இரண்டு மடங்காக தன்னை பெருக்கிக்கொள்ளும் தன்மை கொண்டவை ஆகும்.

ஒருமுறை போட்டால் போதும்

அவ்வாறு பெருகுவதன் மூலம் செப்டிக் டேங்கில் உள்ள கழிவுகளை அவை எளிதாக மட்கும்படி செய்து தண்ணீர ாகவும், வாயுவாகவும் மாற்றி விடுகின்றன. அதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவை உதவுகின்றன. கழிவுகளை சுத்திகரிக்கும் அந்த பாக்டீரியாக்களை ஒருமுறை டேங்கில் பே ாட்டால் போதுமானதாகும்.

எரிபொருளாக பயன்படுத்தலாம்

காற்றழுத்த முறையில் செயல்படும் நுண்ணுயிர்கள் திடக்கழிவுகளை முற்றிலும் மக்கிய நிலையில் மாற்றிவிடும் நிலையில் அதிலிருந்து பயோ வாயு வெளியேற்றப்படுகிறது. அந்த வாயுவுக்கு நிறமோ, வாசனையோ இல்லை. குறிப்பாக அந்த வாயுவை எளிய வீட்டு உபயோக சாதனங்களை இயக்க உதவும் எரிபொருளாக உபயோகிக்கலாம் என்றும் அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story