வீட்டு பராமரிப்புக்கு உதவும் இணைய தளம்
வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்திற்கும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தக்க பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டியது அவசியமானது.
வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்திற்கும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தக்க பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டியது அவசியமானது. அத்தகைய பணிகள் அறைகளை பராமரித்தல், தோட்டங்களை பராமரித்தல், பூச்சி தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல் என்று பல விதங்களில் இருக்கின்றன. மேலும், மின்சார கருவிகள் பராமரிப்பு, தண்ணீர் குழாய்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பர்னிச்சர் வகைகள் என்று வீட்டு உபயோக பொருட்களுக்கான பராமரிப்புகளையும் அவ்வப்போது செய்துகொள்ள வேண்டும்.
மேற்கண்ட பணிகளை கச்சிதமாக செய்து முடிக்க சில இணைய தளங்கள் தகுந்த தகவல்களையும், பல தரப்பட்ட செய்திகளையும் தருகின்றன. அந்த வகையில் வீட்டு பராமரிப்பு பணிகளுக்கு என்று http://www.acmehowto.com என்ற இணைய தளம் பல்வேறு தகவல்களை அளித்து வருகிறது. அந்த இணைய தளத்தில் மேம்படுத்துதல் (Improvements), தக்க இடங்களில் பொருத்துதல் (Fix it) அழகாக மாற்றுதல் (Decorate), திறனாய்வுகள் (Reviews) உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
மேம்படுத்துதல் என்ற தலைப்பில் சமையலறையை ‘ரீ–மாடல்’ செய்து மாற்றி அமைத்தல், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட தலைப்புகளும் உள்ளன. சமையலறை மாற்றி அமைத்தல் எனும் தலைப்பில் அதன் பயன்பாட்டில் இருக்கும் கேபினட்டுகள், பயன்படுத்தும் கருவிகள் (Appliences) சமையல் மேடை, பெயிண்டிங், தரைத்தளம், நீர் தொட்டிகள் மற்றும் திறப்பு குழாய்கள், மின்சார விளக்கு அமைப்பு, இதர தொழில்நுட்பங்கள், காற்றோட்ட வசதி போன்ற உள் தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
மேற்கண்ட தலைப்புகள் ஒவ்வொன்றிலும் அதற்கான விளக்கங்கள், அவற்றின் தரம் மற்றும் அதற்கு வழிமுறைப்படுத்தும் தகவல்கள், பராமரிப்பு வழிமுறைகள், சிறப்பு அம்சங்கள், பொருட்களுக்கான உற்பத்தி நிறுவன முகவரிகள் போன்ற தகவல்கள் மற்றும் முழுமையான வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
ஹோம் தியேட்டர் எனும் தலைப்பில் அதன் பல்வேறு வகைகள், அவற்றை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள், தேர்வு செய்யும் வழிகாட்டு நெறிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு தகவல்களும் தரப்பட்டிருக்கின்றன.
‘பிட்டிங்ஸ்’ என்ற முதன்மை தலைப்பில் ஹோம் அப்ளையன்சஸ் ரிப்பேர், பராமரிப்பு, கான்கிரீட் மேற்பூச்சு, கதவு மற்றும் ஜன்னல்கள், உலர் சுவர், மின்சார கருவிகள், வெப்பமாக்கல் மற்றும் குளிரூட்டல், புல்வெளி மற்றும் தோட்டம், குழாய் அமைப்பு, பூச்சிகளை கட்டுப்படுத்துவது, கூரை அமைப்பு மற்றும் இதர கருவிகள் போன்ற தலைப்புகளும் உள்ளன.
மேற்கண்டவை தவிர பல முக்கியமான அம்சங்களும் கொண்ட இந்த இணையதளம் பலருக்கும் பயனுள்ள வகையிலும், வீடு மற்றும் வீட்டு வசதி பொருட்களை பராமரிப்பதில் மிகவும் உதவ கூடியதாகவும் உள்ளது.
Related Tags :
Next Story