செங்கல் வலிமையை கண்டறியும் சோதனை


செங்கல்  வலிமையை கண்டறியும்  சோதனை
x
தினத்தந்தி 2 March 2019 4:00 AM IST (Updated: 1 March 2019 3:58 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணிகளுக்கான செங்கல் வாங்கப்பட்டவுடன் அதை நேரடியாக பயன்படுத்துவதை கட்டுமான வல்லுனர்கள் வரவேற்பதில்லை.

ட்டுமான பணிகளுக்கான செங்கல் வாங்கப்பட்டவுடன் அதை நேரடியாக பயன்படுத்துவதை கட்டுமான வல்லுனர்கள் வரவேற்பதில்லை. அதன் வலிமை பற்றி ஓரளவாவது அறிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்கேற்ப அவர்கள் பரிந்துரைக்கும் சில சோதனைகளை இங்கே காணலாம்.

* ஒரு செங்கலை எடுத்து அதில் விரல் நகத்தால் ஆழமான கோடு போடப்படும் நிலையில் கோடு பதியவில்லை என்பதன் அடிப்படையில் தரம் கணக்கிடப்படுவது ‘நெயிலிங் டெஸ்ட்’ (Nailing Test) எனப்படும். 

* ஒரு மீட்டர் உயரத்தில் இருந்து செங்கல் தரையில் போடப்பட்டால், எளிதில் அது உடைந்து நொறுங்குகிறதா என்பதை கண்டறிய உதவுவது  ‘டிராப்பிங் டெஸ்ட்’ (
Dropping Test
) ஆகும். 

 * ஒரு செங்கலை உடைத்துப் பார்க்கும்போது, உள்ளே இழை நயம் ஒரே மாதிரி இருப்பது ‘டெக்ஸர் டெஸ்ட்’ (Texture Test) ஆகும். 

* ஒரு பக்கெட் தண்ணீரில் 24 மணி நேரத்துக்கு ஒரு செங்கல் ஊற வைக்கப்பட்ட பின், அதன் எடை 10 சதவிகிதம் மட்டுமே 

அதிகரித்து இருக்க வேண்டும் என்பது ‘அப்சார்ப்‌ஷன் டெஸ்ட்’ (Absorption Test) ஆகும்.  

* ஒரு செங்கல், 1 சதுர சென்டிமீட்டர் அளவில் 70 கிலோ அளவுக்கு அழுத்தம் தாங்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த பரிசோதனை கட்டுமான பொறியியல் கல்லூரிகள், தனியார் கட்டுமான ஆய்வு கூடங்கள், அரசின் கீழ் இயங்கும் பாலிடெக்னிக் என்ஜினீயரிங் கல்லூரிகள், எஸ்.இ.ஆர்.சி. நிலையம் (SERC) போன்ற அமைப்புகளின் கட்டுமான ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. அந்த இடங்களில் பரிசோதனைகளை மேற்கொண்டு செங்கலின் உறுதியை கண்டறிய சுமார் 10 செங்கற்கள் தேவைப்படலாம்.

Next Story