உங்கள் முகவரி

‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கூடுதல் வீடுகள் + "||" + More houses in Tamil Nadu under 'Everybody's House' Scheme

‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கூடுதல் வீடுகள்

‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கூடுதல் வீடுகள்
பிரதம மந்திரியின் அனைவருக்கு வீடு திட்டத்தின் மூலம் 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 1 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அனைத்து பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் இதுவரையில் 16 லட்சத்து 4 ஆயிரத்து 342 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 41 லட்சத்து 42 ஆயிரத்து 133 வீடுகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் கூடுதல் வீடுகள்

தமிழக அளவில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 444 வீடுகளின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 4 லட்சத்து 33 ஆயிரத்து 873 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 5 லட்சத்து 50 ஆயிரத்து 695 வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி தமிழகத்தில் மேலும், 12 ஆயிரத்து 174 வீடுகள் மேலும் கட்டப்பட உள்ளன.

அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழகத்தில் மார்ச் 15-ம் தேதிக்குள் 3 லட்சத்து 93 ஆயிரத்து 611 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சராசரியாக ஒரு மாதத்தில் 2 லட்சம் முதல் 3 லட்சம் வீடுகள் வரை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த தகவலை அனைவருக்கும் வீடு திட்டத்தின் இயக்குனர் மற்றும் இணைச் செயலாளர் அம்ரித் அபிஜித் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உலகத்தர தொழில் நுட்பத்தில் வீடுகள்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் சென்னை பெரும்பாக்கத்தில் உலக தரத் தொழில்நுட்பத்தில் 1,000 வீடுகள் வரும் ஜூலை மாதம் கட்டப்பட உள்ளன. தலா 400 சதுர அடியில் அமைய உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் மத்திய அரசு தலா ரூ.2.5 லட்சம் மானியமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நடுத்தர மக்களை கவரும் புற நகர் குடியிருப்பு திட்டங்கள்
ரியல் எஸ்டேட் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வரிச்சலுகைகளை அளித்துள்ள நிலையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு அவை நல்ல வாய்ப்புகளாக அமைந்துள்ளன என்ற கருத்தை பலரும் தெரிவித்துள்ளனர்.
2. படரும் கொடி போன்ற சோலார் பேனல்கள்
சமீப காலங்களில் புதிய தொழிற்சாலைகள், பெருகும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் புதிய தொழில் நுட்பத்தில் உருவான மின் சாதன பொருட்கள் ஆகியவற்றின் உபயோகம் காரணமாக மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது.
3. அஸ்திவார அமைப்பில் மூன்று நிலைகள்
கட்டுமான அமைப்புகளுக்கான கடைக்கால் என்ற அஸ்திவார அமைப்பு என்பது அவற்றிற்கு முதலும் முக்கியமானதுமான பணியாகும்.
4. வீட்டு மனைகளில் மரம், செடி, கொடிகள் வளர்ப்பு
வீடு கட்ட தொடங்கும் முன்னரே மரம், செடி, கொடிகளுக்கான தக்க இடத்தை தேர்வு செய்து வளர்க்க ஆரம்பிக்கலாம்.
5. நிலத்தடி நீர்மட்டத்தை கண்டறியும் முறைகள்
தற்போதைய காலகட்டத்தில் ‘டவுஸிங் முறை’, ‘எலக்ட்ரிகல் ரெசிஸ்டிவிட்டி’, ‘ஸ்டீல் ராடு சோதனை’, தேங்காய் உருட்டுதல் என்று பல்வேறு முறைகள் நிலத்தடி நீர் மட்டத்தை அறிய கையாளப்பட்டு வருகின்றன.