விரும்பிய விதத்தில் வீட்டை வடிவமைக்க உதவும் இணைய தளம்
அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளை வாங்கவும் அல்லது அவர்களாகவே கட்டமைத்துக்கொள்ளவும் ஏற்ற சூழல் தற்போது அமைந்துள்ளது.
அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளை வாங்கவும் அல்லது அவர்களாகவே கட்டமைத்துக்கொள்ளவும் ஏற்ற சூழல் தற்போது அமைந்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடன் வசதி திட்டங்கள் மூலம் சொந்த வீடு என்பது அனைவருக்கும் சாத்தியமானதாக மாறி வருகிறது. தற்போது, வீடு கட்ட விரும்புபவர்கள் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் ‘பிளானை’ வடிவமைத்துக்கொள்ளும் தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன. அந்த வகையில், வீட்டுக்கான பிளானை வரைந்து கொள்ள பல்வேறு இணைய தளங்கள் உதவி செய்கின்றன.
அவற்றின் மூலம் வீட்டில் உள்ளவர்கள் தங்கள் விருப்பப்படி அறைகள் மற்றும் இதர பகுதிகளை படமாக வரைந்து கொள்ளலாம். பர்னிச்சர்கள், வாஷ்பேசின், கழிவறை ‘குளோசெட்’ அமைப்பு ஆகியவற்றை கச்சிதமாக அமைத்துக்கொள்ளும் விதத்தில் பல வசதிகள் அவற்றில் உள்ளன. அவற்றின் முலம் எண்ணங்களுக்கேற்ப வீட்டின் அனைத்து பகுதிகளையும் வடிவமைப்பு செய்து கொள்ள இயலும். இங்கு ஒரு குறிப்பிட்ட இணைய தளம் பற்றி பார்க்கலாம்.
பல்வேறு மெனுக்கள்
அந்த தளத்தின் இணைப்பிற்கான ‘லிங்க்’ கீழே தரப்பட்டுள்ளது. அந்த தளத்தில் Design, Isometric View, 3D Walk through மற்றும் Print ஆகிய மெனுக்கள் இருக்கின்றன. அவற்றில், முதலாவதாக உள்ள Design என்ற மெனுவை திறந்து, Blank Plan அல்லது Sample Plan என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர், வலது பக்கம் உள்ள Wall என்ற டூலை பயன்படுத்தி எந்த பகுதிகளில் சுவர் தேவையோ அங்கு சுவர்களை அமைக்கலாம். அதே முறையில் கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றையும் கச்சிதமாக வைத்துக் கொள்ளலாம்.
வடிவமைப்பு
அடுத்ததாக உள்ள Transform என்ற டூலை பயன்படுத்தி பொருட்களை வேண்டிய பகுதிக்கு நகர்த்த முடியும் அல்லது அவற்றின் வடிவத்தை மாற்றியும் அமைக்க இயலும். மேலும், தரப்பட்டுள்ள ½எ வகைகளான Isometric View மற்றும் 3D Walk through ஆகியவற்றின் மூலம் தேவையான வண்ணங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பிரிண்ட் எடுக்கலாம்
விருப்பப்படி அனைத்து அமைப்புகளையும் வடிவாக்கம் செய்த பின்னர் Print என்ற மெனுவை தேர்வு செய்து பேப்பரில் பிரிண்ட் செய்து கொண்டு, மாற்றங்கள் தேவையா அல்லது அதுவே போதுமானதா என்று கவனித்துக்கொள்ளலாம். சொந்த வீட்டுக்கான வரைபடத்தை நாமே உருவாக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்களுக்கு இந்த இணைய தளம் ஏற்றதாக இருக்கும். அதன் முகவரி : http://www.smallblueprinter.com/floorplan/floorplan.hml
Related Tags :
Next Story