உங்கள் முகவரி

வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் நான்கு பிரிவுகள் + "||" + Vastu Shastra refers Four sections

வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் நான்கு பிரிவுகள்

வாஸ்து   சாஸ்திரம்   குறிப்பிடும்   நான்கு   பிரிவுகள்
வாஸ்து சாஸ்திரம் என்பது வீடு, மனை ஆகியவற்றின் அமைப்பு பற்றிய தகவல்களை சொல்வது என்பதாக அறியப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரம் என்பது வீடு, மனை ஆகியவற்றின் அமைப்பு பற்றிய தகவல்களை சொல்வது என்பதாக அறியப்பட்டுள்ளது. ஆனால், வாஸ்துவின் அடிப்படை நிலைகள் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளன. அவற்றின் மூலம் வாழ்க்கை பாதையை இனிமையாக மாற்றிக்கொள்ள தக்க வழிகளை காட்டுவதாகவும் வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பூமி வாஸ்து 

நிலம் அல்லது மனையின் தன்மைகள் பற்றி இப்பகுதி குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட ஒரு மனை அல்லது இடம் நான்கு திசைகளில் எந்த திசையை நோக்கியவாறு அமைந்துள்ளது என்பது பற்றி சொல்கிறது. நான்கு பக்கங்களிலும் சாலைகள் கொண்ட மனைகள் கூட இருக்கலாம் என்ற நிலையில், சம்பந்தப்பட்ட மனைக்கான சாலை அமைப்பு ஒரு பக்கம் மட்டுமே உள்ளதா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட திசைகளில் உள்ளதா என்ற தகவல்களையும் குறிப்பிடுகிறது. கண்களுக்கு தெரியாத சல்லிய தோ‌ஷங்கள், மனையின் சுற்றுப்புறம், மண்ணின் நிறம் மற்றும் இதற்கு முன்னர் மனை எப்படிப்பட்ட பகுதியாக இருந்தது என்ற செய்திகளை குறிப்பிடுகிறது. மேலும், அவற்றில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் வழிகாட்டுகிறது.

கட்டிட வாஸ்து 

வீடுகள், அடுக்குமாடிகள், பொது கட்டமைப்புகள் ஆகியவற்றின் வகைக்கேற்ப அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள் கட்டமைப்புகள் பற்றிய அனைத்து தகவல்களையும் இப்பகுதி விளக்குகிறது. சொந்த வீடு அல்லது வாடகை வீடு சம்பந்தமான வி‌ஷயங்களையும் இப்பகுதி குறிப்பிடுகிறது. வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள், பள்ளி–கல்லூரிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பொதுத்துறை கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து வகை கட்டுமானங்களின் அமைப்பு முறை பற்றியும் இப்பகுதியில் காணலாம். மனை அல்லது இடத்தில் எந்த அளவில், எந்த முறையில், எந்த காலகட்டத்தில் கட்டிடங்களை அமைக்க வேண்டும் என்ற செய்திகள் இப்பகுதில் சொல்லப்படும். 

கட்டுமானம் அமையும் இடத்தின் நான்கு பிரதான திசைகள் மற்றும் அவை இணையும் நான்கு கோண திசைகள் பற்றியும், அவற்றின் அமைப்புகள் பற்றியும் இப்பகுதி குறிப்பிடும். பிரதான நுழைவாசல், வரவேற்பறை, வீட்டிற்கு பின்புறம் உள்ள வாசல்கள், சமையலறை, உணவு அறை, ஓய்வு அறை, பணியாற்றும் அலுவலகம், தலைமை அதிகாரியின் அறை, மின் சாதனங்கள் அறை, படிக்கட்டுகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை விடுதிகள், பாத்ரூம் டாய்லெட் போன்ற அனைத்து அறைகளின் அமைப்பையும் இது குறிப்பிடும்.

இருக்கை வாஸ்து 

வீடுகள் மற்றும் வியாபார, தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இதர கட்டமைப்புகளில் அமரும் இருக்கைகள், ஊஞ்சல்கள், படுக்கைகள் அமைக்கும் விதம் ஆகியவை பற்றி இப்பகுதி கூறுகிறது. அலுவலகம் அல்லது பொது கட்டிடம் ஆகியவற்றில் பணி புரிபவர்கள் அமரும் மீட்டிங் ஹால்கள், கேண்டீன்கள், ஓய்வு எடுக்கும் இடம் பற்றிய தகவல்களை இப்பகுதி தருகிறது. நிறுவனத்தின் தலைவர் எங்கே அமர வேண்டும், அவரைச் சந்திக்க வருபவர்கள் எங்கே அமர வேண்டும், பணிபுரிபவர்கள் எங்கே அமர வேண்டும் என்ற நுட்பமான தகவல்களையும் இப்பகுதி குறிப்பிடுகிறது.

வாகன வாஸ்து 

இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட மற்ற போக்குவரத்துச் சாதனங்கள் பற்றி இப்பகுதி குறிப்பிடுகிறது. (மன்னர்கள் காலத்தில் தேர், வண்டி, பல்லக்கு ஆகியவை பற்றி சொல்லப்பட்டது) இன்றைய நாகரிக காலகட்டத்தில் வீடுகளில் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் ஒன்றாவது இருப்பது அவசியமாக மாறி இருக்கிறது. அந்த வாகனங்களை வீட்டில் எங்கு நிறுத்த வேண்டும், எந்த திசை நோக்கி நிறுத்த வேண்டும், அவற்றின் வாராந்திர பூஜை போன்ற வி‌ஷயங்களை இப்பகுதி குறிப்பிடுகிறது. பயணங்களுக்கு துணை செய்யும் வாகனங்களின் முக்கியத்துவம் பற்றி வாஸ்துவின் இப்பிரிவு கவனம் கொள்கிறது.