பராமரிப்புக்கு ஏற்ப கழிவு நீர் தொட்டிகள்
பராமரிப்புக்கு ஏற்ப கழிவு நீர் தொட்டிகள் அமைக்கப்படவேண்டும்.
கழிவுநீர் இணைப்பு வசதி அமைக்கப்பட வேண்டிய பஞ்சாயத்து பகுதிகள் அல்லது சிறிது காலம் சென்ற பிறகு கிடைக்கலாம் என்ற நகர விரிவாக்க பகுதிகளில் கழிவுநீர் வெளியேற தகுந்த ‘செப்டிக் டேங்க்’ அமைப்பை கட்டுவது நல்லது. அவற்றை வீட்டின் பின்பக்கமாக அமைக்காமல், முன்பக்கங்களில் அமைத்துக்கொள்வது பல சிக்கல்களை தவிர்க்கும்.
வீட்டின் பின்பக்கமாக அமைந்துள்ள செப்டிக் டேங் கிளனிங் பணிகளின்போது பல சிரமங்கள் ஏற்படலாம். வீட்டின் முன்பகுதிகளில் அவை உள்ள நிலையில் பணிகளை எளிதாக செய்து கொள்ளலாம். பின்னர் கழிவுநீர் இணைப்பு வசதி கிடைக்கும் பட்சத்தில் அதற்கான இணைப்பு வேலைகளை எளிதாக செய்துகொள்வதற்கும் முன்பக்க செப்டிங் டேங்க் அமைப்பு ஏற்றதாக இருக்கும்.
குறிப்பாக, குடிநீர் இணைப்பு கொண்ட தண்ணீர் தொட்டியையும் வீட்டுக்கு முன்புறம் கார் பார்க்கிங் பகுதியில் அல்லது வீட்டின் அமைப்புக்கேற்ப கட்டமைத்துக்கொள்ளலாம். மேலும், ‘ஓவர்ஹெட் வாட்டர் டேங்க்’ அமைப்பை கான்கிரீட்டில் அமைக்காமல், எடை குறைவான பிளாஸ்டிக் வகைகளை பயன்படுத்துவதும் நல்ல வழிதான்.
Related Tags :
Next Story