வீட்டு வசதி திட்டத்தில் அரசு அளிக்கும் சலுகைகள்
அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் மூலம் பெண்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்கள், குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர்-1 மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர்-2 ஆகியோர் சொந்த வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு அரசு பல்வேறு சலுகைகள் உட்பட மானியமும் அளிக்கிறது. அவை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்கள்
ஒரு ஆண்டில் ரூ.2 முதல் 3 லட்சம் என்ற வரம்புக்குள் வருமானம் பெறுபவர்களுக்கு (Economically Weaker Section - EWS ) அரசு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 322 சதுர அடி வரை வீடுகள் அமைக்க ரூ.6 லட்சம் கடன் உதவி அளிக்கப்படுகிறது. அதற்கான வட்டி மானியம் 6.5 சதவிகிதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் மானியமாக தரப்படும். கடனுக்கான கால அவகாசம் 20 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்கள் என்பதை நிரூபிக்க முறையான ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம்.
குறைந்த வருவாய் பிரிவினர்
இந்த வகையை சார்ந்த பிரிவினரும் (Light Income Group - LIG) சுலபமாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PM-AY) திட்டத்தின் கீழ் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து வீடு கட்டுவதற்கான கடன் தொகையை பெறலாம். இந்த பிரிவுக்கான ஆண்டு வருமானம் ரூ.3 முதல் 6 லட்சம் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 645 சதுர அடி வரையில் வீடுகள் அமைக்க ரூ.6 லட்சம் கடன் உதவி கிடைக்கும். இதற்கான வட்டி மானியம் 6.5 சதவிகிதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் மானியமாக அளிக்கப்படுகிறது. கடனுக்கான கால அவகாசம் 20 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடுத்தர வருவாய் பிரிவினர்-1
ஒரு ஆண்டில் ரூ.6 முதல் 12 லட்சம் என்ற வரம்புக்குள் வருமானம் பெறுபவர்களுக்கு (Medium Income Group - MIG -1) அரசு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1291 சதுர அடி வரையில் வீடுகள் அமைக்க ரூ.9 லட்சம் கடன் உதவி கிடைக்கும். இதற்கான வட்டி மானியம் 4 சதவிகிதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் மானியமாக அளிக்கப்படும். கடனுக்கான கால அவகாசம் 20 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடுத்தர வருவாய் பிரிவினர்-2
இந்த பிரிவுக்கான ( Medium Income Group - MIG - 2) ஆண்டு வருமானம் ரூ.12 முதல் 18 லட்சம் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1614 சதுர அடி வரையில் வீடுகள் அமைக்க ரூ.12 லட்சம் கடன் உதவி கிடைக்கும். இதற்கான வட்டி மானியம் 3 சதவிகிதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மானியமாக அளிக்கப்படுகிறது. கடனுக்கான கால அவகாசம் 20 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள்
இந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதால், வீடு வாங்க விரும்பும் பெண்கள் மேற்கண்ட பிரிவுகளில் எதை சேர்ந்தவராக இருந்தாலும், எளிதாக வீடு கட்டுவதற்கு அல்லது வீடு வாங்குவதற்கான கடனை பெற முடியும்.
Related Tags :
Next Story