பூர்வீக சொத்தில் பெண்களுக்கான உரிமை


பூர்வீக  சொத்தில் பெண்களுக்கான உரிமை
x
தினத்தந்தி 25 May 2019 3:30 AM IST (Updated: 24 May 2019 6:49 PM IST)
t-max-icont-min-icon

பெற்றோர்கள் வழியில் வரக்கூடிய பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது.

பெற்றோர்கள் வழியில் வரக்கூடிய பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. ஒரு வேளை பெண் வாரிசுகள் அவர்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு வேண்டாம் என்று முடிவெடுக்கும் நிலையில், மற்ற வாரிசுகள் அதை பகிர்ந்து கொள்ளலாம். திருமணமான பெண்களுக்கு சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவை பற்றி இங்கே காணலாம்.

2005–ம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி, பெண்கள் அவர்களது தந்தையின் காலத்திற்குப் பிறகு, அவருடைய பூர்வீகச் சொத்தில் உரிமை கேட்க முடியும். ஆனால், 25.3.1989–க்கு முன்னதாக திருமணம் செய்து கொண்ட ஓரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கேட்க இயலாது. அந்த காலகட்டத்துக்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட பெண்கள் அவர்களது தந்தையின் பூர்வீகச் சொத்தில் உரிமை கொண்டாடலாம். ஆனால், அந்த சொத்து 25.3.89–க்கு முன்னர் பாகப்பிரிவினை அல்லது விற்பனை செய்யப்பட்டிருந்தால், அதன் மீது உரிமை கொண்டாட முடியாது.

பொதுவாக, ஒரு குடும்ப சொத்து பாகம் பிரிக்கப்படும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளும் சம்மதம் தெரிவிப்பது அவசியம். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு செய்யப்படும் பாகப்பிரிவினை சட்டப்படி செல்லாது.

Next Story