சுவர்களுக்கான மேற்பூச்சில் தொழில்நுட்ப அம்சங்கள்


சுவர்களுக்கான  மேற்பூச்சில்   தொழில்நுட்ப  அம்சங்கள்
x
தினத்தந்தி 25 May 2019 3:30 AM IST (Updated: 24 May 2019 7:15 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான அமைப்புகளுக்கான மேற்காரை பூச்சு பணிகள் பொதுவான மூன்று விதங்களில் இருக்கின்றன.

ட்டுமான அமைப்புகளுக்கான மேற்காரை பூச்சு பணிகள் பொதுவான மூன்று விதங்களில் இருக்கின்றன. அதாவது, உட்புற பூச்சு, வெளிப்புற பூச்சு மற்றும் உட்புற மேற்கூரை பூச்சு ஆகியயனவாகும். அவற்றில் கவனிக்கப்பட வேண்டிய தொழில் நுட்ப குறிப்புகளை காணலாம்.

கலவை விகிதங்கள்

பொதுவாக, கட்டமைப்பின் உட்புற சுவர்களுக்கான மேற்காரை பூச்சு பணியில் சிமெண்டு–மணல் கலவை 1:5 என்கிற விகிதத்தில் இருக்கலாம். வெளிப்புற சுவர்களுக்கான பூச்சு வேலைக்கு 1:6 என்கிற விகிதத்தில் கலவை அமையலாம். மேலும், உட்புற மேற்கூரை பூச்சு பணியில் 1:3 என்கிற விகிதத்தில் கலவையை பயன்படுத்தலாம். 

வீடுகளின் உட்புறம்

வீடுகளின் உட்புற பூச்சு மற்றும் மேற்கூரை உட்புற பூச்சு ஆகியவை 12 எம்.எம் என்ற அரை அங்குல அளவுக்கும் மிகாமல் கலவையின் கனம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதை விடவும் அதிக கனம் தேவைப்படும் பட்சத்தில் இரண்டு தடவைகளாக மேற்பூச்சு பணிகளை செய்து கொள்ளலாம். 

வெளிப்புற சுவர் பூச்சு

வெளிப்புற சுவர் பூச்சுக்கான கனம் 16 எம்.எம் என்ற அளவை விடவும் கூடுதல் ஆகாமல் இருப்பது நல்லது. அதனால், பூச்சு வேலைக்கு முன்னர் கனம் பற்றி முடிவு செய்து கொண்டு செயல்பட வேண்டும். உடைந்த சிறிய துண்டு டைல்ஸ் சில்லுகளை சுவரில் ஆதார புள்ளியாக பதித்து வைத்து, அதன் அடிப்படையில் பூச்சு பணிகள் சுவருக்கு இணையான நேர் கோட்டில் அமைவதை உறுதி செய்து கொள்ளலாம்.

நல்ல ‘பினிஷிங்’ அவசியம்

மேற்காரை பூச்சு பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் சுவரின் தன்மை எப்படி உள்ளது என்பதை கவனித்து, ‘ஸ்பாஞ்ச்’ கொண்டு சுவர் தடவி விடப்படும்போது மேற்பரப்பு சற்றே கடினத்தன்மை கொண்டதாக அமையும். அதற்கு பதிலாக சிமெண்டு பவுடரை தெளித்து, தேய்த்து விடப்படுவது கூடாது. அதன் காரணமாக சுவர் பரப்பில் நுண்ணிய விரிசல்கள் ஏற்படக்கூடும்.

Next Story