உங்கள் முகவரி

வாஸ்து குறைகள் அகல எளிய வழிமுறை + "||" + Get rid of Vastu flaws Simple instruction

வாஸ்து குறைகள் அகல எளிய வழிமுறை

வாஸ்து குறைகள் அகல எளிய வழிமுறை
இன்றைய காலகட்டத்தில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களும் வாஸ்து விதிகளை கவனத்தில் கொள்கின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தங்களது வீடுகளும் வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பது அறியப்பட்டுள்ளது. ஆனால், நகர்ப்புற நெருக்கடிகள் காரணமாகவும், இடப்பற்றாக்குறையாலும் பல வீடுகளில் வாஸ்து முறைகளை கடைப்பிடிக்க இயலாமல் போகிறது. அந்த நிலையில் வாஸ்து தோஷத்தை எளிதாக அகற்றும் வழிமுறை பற்றி இங்கே காணலாம்.

விநாயகர் மற்றும் மகாலட்சுமி ஆகிய தெய்வங்களின் அருளை பெறக்கூடிய வழியாகவும் இந்த முறை அமைகிறது. வார நாட்களில் செவ்வாய் அல்லது வெள்ளி ஆகிய ஏதாவது ஒரு கிழமையில் வீட்டின் தலைவாசல் நிலையின் நீள, அகலத்துக்கேற்ப அருகம்புல் மாலை மற்றும் வெற்றிலை மாலை ஆகியவற்றை சூட்ட வேண்டும்.

அந்த இரண்டு மாலைகளையும் மறுநாள் காலையில் அகற்றி, தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் சிறிது நேரம் மூழ்கும்படி வைக்க வேண்டும். பின்னர், ஒரு சுபஹோரையில் அந்த தண்ணீரை வீட்டின் எட்டுத் திக்குகளிலும் மாவிலை கொண்டு தெளிக்க வேண்டும். பின்னர், அருகம்புல் மற்றும் வெற்றிலை மாலை ஆகியவற்றை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி எடுத்துச்சென்று ஆறு அல்லது கடலில் போட்டு விடலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்று 3 அல்லது 4 முறை செய்து வந்தால் வாஸ்து ரீதியான பாதிப்புகள் அகலும் என்று வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.