அரசின் கட்டுமான விதிமுறைகளில் சில அம்சங்கள்
தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாட்டு விதிமுறைகள் மற்றும் கட்டிட விதிகள்-2019 என்ற புதிய கட்டுமான விதிகளில் உள்ள சில முக்கியமான அம்சங்களாவன:
* 6 மீட்டருக்கும் குறைவான அகலம் உள்ள சாலைப் பகுதிகளில் எட்டு குடியிருப்புகள் அனுமதிக்கப்படும். 6 மீட்டருக்கும் அதிகமான அகலம் கொண்ட சாலை உள்ள பகுதிகளில் 16 குடியிருப்புகள் அனுமதிக்கப்படும். தளர்த்தப்பட்ட இந்த விதிமுறைகளால் நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாடு அடையும்.
* சென்னை பெருநகரப் பகுதியில் 40 சதுர மீட்டர் (சுமார் 430 சதுர அடி) பரப்பளவும், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் 60 சதுர மீட்டர் (சுமார் 645 சதுர அடி) பரப்பளவும் குடியிருக்கும் வீடுகளின் அளவாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
* 18 மீட்டர் அகல சாலை கொண்ட உயர்ந்த கட்டிடங்களுக்கான மாடிகள் எண்ணிக்கையில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. அந்த கட்டிடத்திற்கும், அதை அடைவதற்கான சாலைக்கும் இடையில் இருக்க வேண்டிய காலி இடத்தின் அளவு அதிகபட்சம் 20 மீட்டர் ஆகும்.
* 18 மீட்டரை விட குறைவான உயரம் கொண்ட கட்டிடங்களுக்கான குறைந்தபட்ச சாலை அகலம் 10 மீட்டரிலிருந்து 9 மீட்டர் ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story