பத்திரப்பதிவை மேற்கொள்வதற்கான கால அவகாசம்
சொத்துக்களின் உரிமையை மாற்றம் செய்யும் ஒரு பத்திரத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்துப் போட்டுவிட்ட நிலையில், நான்கு மாதங்களுக்குள் சார் பதிவாளர் முன்பாக அதனை பதிவுக்கு தாக்கல் செய்யவேண்டும்.
சொத்துக்களின் உரிமையை மாற்றம் செய்யும் ஒரு பத்திரத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்துப் போட்டுவிட்ட நிலையில், நான்கு மாதங்களுக்குள் சார் பதிவாளர் முன்பாக அதனை பதிவுக்கு தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு செய்ய இயலாத நிலையில் அரசு நிர்ணயித்த அபராதத்தை செலுத்தி மேலும் நான்கு மாதம் காலநீட்டிப்பு பெற்று அதற்குள் தாக்கல் செய்துகொள்ளலாம்.
பத்திரத்தை எழுதிக்கொடுப்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந்து, அவர்களில் யாராவது ஒருவர் நேரடியாக சார் பதிவாளர் அலுவலகம் வந்து கையெழுத்து, ரேகை பதிவு ஆகியவற்றை செய்ய இயலாத சூழலில், தக்க அபராதம் செலுத்தி மேலும் நான்கு மாதம் காலநீட்டிப்பு பெறலாம். மேற்கண்ட காலநீட்டிப்புகள் அடிப்படையில், ஒரு பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு எட்டு மாதங்களும், சார் பதிவாளர் முன்னிலையில் பத்திரதாரர்கள் பதிவை பூர்த்தி செய்வதற்கு நான்கு மாதங்களும் ஆக மொத்தம் ஒரு பத்திரத்தின் ஆயுள் ஒரு வருடம் ஆகும்.
கையெழுத்து போடப்பட்டு எட்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் சார் பதிவாளர் முன் தாக்கல் செய்யப்படாத ஆவணம் செல்லாது. அதேபோல் சார் பதிவாளர் முன் தாக்கல் முடித்த நிலையில் நான்கு மாதங்களுக்குள் கையெழுத்திட்ட அனைவரும் வந்து ஒப்புதல் கையெழுத்து, கைரேகை பதிப்பது ஆகியவற்றை செய்யாவிட்டாலும் பத்திரம் பதிவு செய்ய மறுக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும்.
Related Tags :
Next Story