வல்லுனர் கருத்து : ‘கட்டுமானங்களுக்கு, கட்டமைப்பு வரைபடம் மிகவும் அவசியமானது..’
தேசிய கட்டிட விதிகளின்படி கட்டிட பயன்பாட்டின் அடிப்படையில் தாங்கக்கூடிய சுமையைக் கணக்கிட்டு அதற்கேற்ப கட்டுமானத்தை வடிவமைக்க வேண்டியது கட்டுமானப் பொறியாளரின் பொறுப்பாகும்.
தேசிய கட்டிட விதிகளின்படி கட்டிட பயன்பாட்டின் அடிப்படையில் தாங்கக்கூடிய சுமையைக் கணக்கிட்டு அதற்கேற்ப கட்டுமானத்தை வடிவமைக்க வேண்டியது கட்டுமானப் பொறியாளரின் பொறுப்பாகும். கட்டுமானப் பணியை தொடங்குவதற்கு முன்னர் வரைவாளரைக் கொண்டு வரைபடம் தயாரித்துக் கொள்ள வேண்டும். கோண அளவுகள், ரீ–இன்போர்ஸ்மென்ட் டைப், கம்பிகளின் அளவு, கட்டுமானப் பொருட்களின் தரம் ஆகியவை குறிப்பிடப்பட்ட வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டுனர் கட்டிடத்தை உருவாக்க வேண்டும்.
கட்டுமான அமைப்புக்கான வரைபடம் இல்லாமல் கட்டுமானத் திட்டத்தைத் தொடங்கக் கூடாது. கட்டுமானப் பணி நடைபெறும்போது, கட்டிடக்கலை வல்லுநர், கட்டுனர் ஆகியோரிடம் கட்டிட அமைப்பு வரைபடம் இருக்க வேண்டும். கட்டுமானப் பணி முடிவடைந்த பிறகு அந்த வரைபடம் கட்டிட உரிமையாளரிடம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
எந்தவகை கட்டிடமாக இருந்தாலும் அதன் கட்டமைப்பில் மாற்றங்களை செய்வதற்கு, கட்டுமான அமைப்பு வரைபடம் அவசியம். அதாவது, கட்டிடத்தில் கூடுதல் தளம் கட்டுவதால் ஏற்படும் சுமையை கச்சிதமாக கணக்கிட கட்டுமான அமைப்பு வரைபடம் தேவை. ஏற்கெனவே உள்ள அறையை பெரிதாக கட்டவோ அல்லது கூடுதலாக அறைகளை அமைக்கவோ பால்கனியைப் பயன்படுத்த நேரிடலாம். அந்த பணிகளின்போது கட்டிட அமைப்பு வரைபடம் இல்லாமல் எதையும் செய்ய இயலாது.
எதிர்காலத்தில் கட்டிடத்தின் பயன்பாடு குடியிருப்பு என்ற நிலையிலிருந்து வர்த்தக பயன்பாடு என்ற நிலைக்கு மாற்றம் பெறும்போது, கட்டிடத்தின் பாதுகாப்பு அம்சங்களை கண்டறிய சொத்துப்பத்திரம் போல கட்டிட அமைப்பு வரைபடமும் உரிமையாளரிடம் இருப்பது அவசியமானது.
–முனைவர். சாந்தகுமார், கட்டமைப்பு பொறியியல் வல்லுனர்.
Related Tags :
Next Story