மின் சாதனங்கள் பயன்பாட்டில் எச்சரிக்கை


மின் சாதனங்கள் பயன்பாட்டில் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2019 10:41 AM GMT (Updated: 2019-08-10T16:11:14+05:30)

மின்சார சாதங்களிலிருந்து வெளியாகும் காந்தப்புலம் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற நிலையில் கீழ்க்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.

* தொலைக்காட்சி பெட்டியிலிருந்து வரக்கூடிய மின்காந்த புலத்தால் பாதிக்கப்படாமல் இருக்க குறைந்தபட்சம் 4 அடி தூரம் தொலைக்காட்சி பெட்டிக்கும், அதை பார்ப்பவருக்கும் இடையில் இருப்பது அவசியம்.

* மின்சாதனங்களுக்கு மிக அருகில் படுக்கையை அமைப்பது கூடாது.

* வீடுகள் அல்லது குடியிருப்புகளுக்கு மிக அருகில் உயர் அழுத்த மின் கம்பிப்பாதை, துணை மின்நிலையங்கள் ஆகியவை இருப்பதும் கூடாது.

* ‘மெயின் ஸ்விட்ச் போர்டு’ படுக்கையறைக்கு மிகவும் அருகில் இருப்பின், கட்டிலை போதுமான தொலைவுக்கு நகர்த்திக்கொள்ள வேண்டும்.

Next Story