இணைய தளத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பு


இணைய தளத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பு
x
தினத்தந்தி 17 Aug 2019 3:14 PM IST (Updated: 17 Aug 2019 3:14 PM IST)
t-max-icont-min-icon

சொத்துக்களின் சந்தை மதிப்பு வழிகாட்டி வருவாய் கிராம வாரியாக பதிவுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சொத்துக்களின் சந்தை மதிப்பு வழிகாட்டி வருவாய் கிராம வாரியாக பதிவுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள வீடு, மனை, நிலம் போன்ற சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயம் செய்வதற்காக, மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பீட்டுத் துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சந்தை மதிப்பு வழிகாட்டியானது புல எண்கள் வாரியாக அல்லது தெருக்கள் வாரியாக தயாரிக்கப்பட்டு, பதிவுத்துறையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தெரு அல்லது புல எண் மதிப்பு

பதிவுத்துறை இணைய தளத்தில் சம்பந்தப்பட்ட பதிவு மண்டலம், சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் வருவாய் கிராமம் ஆகியற்றை தெரிவு செய்து பின்னர் தேவைப்படும் குறிப்பிட்ட தெரு அல்லது புல எண்ணிற்குரிய சந்தை மதிப்பு வழிகாட்டி பற்றிய தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள இயலும்.

பி.டி.எப் வடிவம்

தற்பொழுது நடைமுறையில் உள்ள, இந்த திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வருவாய் கிராமத்தின் அனைத்து புல எண்கள் மற்றும் தெருக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டியினை, ஒரே நேரத்தில் பொதுமக்கள் பார்வையிட வசதியாக பி.டி.எப் வடிவத்தில், வருவாய் கிராம வாரியாக, பதிவுத்துறையின் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பதிவுத்துறையின் இணையதளத்தில் சம்பந்தப்பட்ட பதிவு மண்டலம், சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் வருவாய் கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்து, குறிப்பிட்ட வருவாய் கிராமத்தில் உள்ள அனைத்து புல எண்கள் அல்லது தெருக்களின் சந்தை வழிகாட்டி மதிப்புகளை பி.டி.எப் வடிவத்தில் பார்க்க இயலும்.

திருத்தங்கள் செய்யப்படும்

தேவைப்படுவோர் அந்த விவரங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த சந்தை மதிப்பு வழிகாட்டியில், ஏதேனும் முரண்பாடுகள் இருப்பதாக கண்டறிபவர்கள், தக்க ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளரிடம் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கலாம். அவை தக்க விதத்தில் பரிசீலிக்கப்பட்டு, முரண்பாடுகள் இருப்பின் விதிமுறைகளின்படி அந்த முரண்பாடுகள் சீர் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story