மின் சாதனங்களுக்கான வயர் தேர்வு


மின் சாதனங்களுக்கான வயர் தேர்வு
x
தினத்தந்தி 17 Aug 2019 3:19 PM IST (Updated: 17 Aug 2019 3:19 PM IST)
t-max-icont-min-icon

அறைகளில் ‘குளுகுளு’ சூழலை ஏற்படுத்தும் ஏ.சி மற்றும் குளியலறையில் பொருத்தப்படும் ‘வாட்டர் ஹீட்டர்’ ஆகியவற்றுக்கான பிளக் பாயின்டுகளுக்கு 7/20 திறன்கொண்ட வயர்களை பயன்படுத்த வேண்டும்.

றைகளில் ‘குளுகுளு’ சூழலை ஏற்படுத்தும் ஏ.சி மற்றும் குளியலறையில் பொருத்தப்படும் ‘வாட்டர் ஹீட்டர்’ ஆகியவற்றுக்கான பிளக் பாயின்டுகளுக்கு 7/20 திறன்கொண்ட வயர்களை பயன்படுத்த வேண்டும். வாஷிங் மெஷின், கிரைண்டர், பிரிட்ஜ், இண்டக்ஸன் ஸ்டவ், மைக்ரோ ஓவன், இன்வெர்ட்டர் போன்ற சாதனங்களுக்கு 3/20 திறன் கொண்ட வயர்கள் பொருத்தமாக இருக்கும். அயர்ன் பாக்ஸ் மற்றும் இதர சாதனங்கள் பயன்படுத்தும் பிளக் பாயின்டுகளில் 1/80 திறன்கொண்ட ஒயர்கள் பயன்படுத்தவேண்டும்.

மின் சாதனங்களுக்கு எப்போதுமே மூன்று பின்கள் கொண்ட பிளக்கை பயன்படுத்த வேண்டும். சுவிட்ச் பாக்ஸ்களில் ‘பின்னை’ வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான ‘குளோஸிங்’ வகைகள் பாதுகாப்பானவை. மேலும், பிரிட்ஜ், ஏ.சி, கம்ப்யூட்டர், டி.வி போன்றவற்றுக்கு, ஐந்து அடிக்குக் குறையாத ஆழமுள்ள குழியில் கரித்துகள், உப்பு, ஆற்று மணல் ஆகியவற்றை நிரப்பி கச்சிதமான ‘எர்த் கனெக்‌ஷன்’ தருவது பாதுகாப்பானது.

Next Story