கட்டிய வீட்டை நகர்த்தும் தொழில்நுட்பம்
கட்டப்பட்ட வீட்டை தக்க தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி, அஸ்திவாரத்துடன் பெயர்த்து எடுத்து, சற்று தொலைவில் நகர்த்தி வைப்பது அல்லது தரை மட்ட அளவிலிருந்து குறிப்பிட்ட அளவுக்கு உயர்த்தி அமைப்பது பற்றிய செய்திகளை பலரும் அறிந்திருப்போம்.
கட்டப்பட்ட வீட்டை தக்க தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி, அஸ்திவாரத்துடன் பெயர்த்து எடுத்து, சற்று தொலைவில் நகர்த்தி வைப்பது அல்லது தரை மட்ட அளவிலிருந்து குறிப்பிட்ட அளவுக்கு உயர்த்தி அமைப்பது பற்றிய செய்திகளை பலரும் அறிந்திருப்போம். அவ்வாறு ஒரு வீட்டை நகர்த்தும் பணிகளை கான்ட்ராக்டு முறையில் தனியார் கட்டுமான நிறுவனங்கள் செய்து தருகின்றன. பல்வேறு கருவிகள், தொழில்நுட்ப வரையறைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதுடன், அனுபவமிக்க வல்லுனர்களைக் கொண்டுதான் அந்த பணிகளை மேற்கொள்ள இயலும். கட்டிடத்தை பெயர்த்து அமைப்பது என்பதை எவ்விதமான சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்படலாம் என்பது பற்றி சம்பந்தப்பட்ட கட்டுமான அமைப்புகளை சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம்.
* ஒரு கட்டமைப்பானது அதன் கட்டுமானப்பணிகளின் தொடக்கத்தில் முறையான அடித்தள அமைப்பிற்கான திட்டமிடப்படாமல் அமைக்கப்பட்டிருக்கலாம். அது போன்ற சூழலில் கட்டிடத்தை வலுவாக்கும் நோக்கில் நகர்த்துவது அல்லது உயர்த்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். அடித்தளம் வலுவாக அமைக்கப்படும்போது கட்டிடத்தின் சந்தை மதிப்பு கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
* ‘பவுண்டேசன்’ என்று சொல்லப்படும் அஸ்திவாரத்திற்கு அவசியமான பழுது பார்ப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளில் கட்டிடம் நகர்த்தப்படலாம்.
* பெரும் மழைக்காலங்களில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துவிடாதவாறு நிரந்தர தீர்வாக அடித்தளத்தை உயர்த்தி அமைக்க வேண்டிய நிலையில் வீட்டை நகர்த்த வேண்டியதாக இருக்கும்.
* வீட்டின் தலைவாசல் திசையை மாற்றி அமைப்பதற்காகவும், பழைய நிலையிலிருந்து மேலும் அழகாக மாற்றவும் கட்டிடம் நகர்த்தப்படலாம்.
* சீரற்ற நிலப்பரப்பு காரணமாக ‘செட்டில்மெண்டு’ (Ex-c-ess-ive settl-e-m-ent) என்று சொல்லப்படும் அஸ்திவார மட்டம் தாழ்ந்து விடும் நிலையில், அதை சீரமைக்க கட்டமைப்பை நகர்த்த வேண்டியது அவசியம்.
* வாஸ்து அடிப்படையில் வீட்டுக்கு நேர் எதிரில் உள்ள சாலையால் ஏற்படும் தெருக்குத்து பாதிப்புகள், வீட்டுக்கு நேர் எதிராக உள்ள வர்த்தக நிறுவனங்களால் வரக்கூடிய சிக்கல்கள் ஆகியவற்றை தவிர்ப்பதற்காகவும் வீடுகள் நகர்த்தி அமைக்கப்படலாம்.
* கட்டிடத்தின் மீது சூரிய வெளிச்சம் நன்றாக படியவேண்டும் என்ற காரணத்தின் அடிப்படையில் அதன் திசையை மாற்றி அமைக்கவும் கட்டிடப் பெயர்ப்பு செய்யப்படுகிறது.
* வீட்டின் தோற்றம், வாசல் பகுதி மாற்றம் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கேற்ப அதன் முகப்பு அமைப்பு ஆகியவற்றில் மாற்றம் செய்வதற்காகவும் கட்டிட அமைப்புகள் நகர்த்தப்படலாம்.
Related Tags :
Next Story