பட்டா அடிப்படையில் சொத்து வாங்கும் போது..


பட்டா அடிப்படையில் சொத்து வாங்கும் போது..
x
தினத்தந்தி 17 Aug 2019 4:09 PM IST (Updated: 17 Aug 2019 4:09 PM IST)
t-max-icont-min-icon

வீடு அல்லது நிலம் ஆகியவற்றை வாங்கும்போது அவற்றிற்கான ஒரிஜினல் பத்திரங்கள் இல்லை என்று கூறப்படும் நிலையில், வருவாய்த்துறை ஆவணமான பட்டாவின் அடிப்படையில் அவற்றை வாங்கலாம்.

வீடு அல்லது நிலம் ஆகியவற்றை வாங்கும்போது அவற்றிற்கான ஒரிஜினல் பத்திரங்கள் இல்லை என்று கூறப்படும் நிலையில், வருவாய்த்துறை ஆவணமான பட்டாவின் அடிப்படையில் அவற்றை வாங்கலாம். (பத்திரத்திற்கான நகலை பத்திரதாரர் மூலம் சம்பந்தப்பட்ட சார் பதிவகத்திலிருந்து பெற்று அதன் உரிமையாளர் பற்றிய சரியான தகவலை அறிந்து கொள்ள வேண்டும்) ஆனால், ஒரிஜினல் பத்திரம் தொலைந்து விட்டது என் பதற்கு ஆதாரமாக நீதிமன்றம் அல்லது காவல்துறையால் உறுதி செய்து அளிக்கப்பட்ட சான்றிதழ் அவசியமானது. மேலும், வில்லங்கச்சான்று மூலமாகவும் சொத்து பற்றிய தகவல்களை பெற்று உறுதி செய்து கொண்டு பின்னர் அந்த சொத்து வாங்குவது பற்றிய முடிவை எடுக்கலாம்.

Next Story