வீடுகள் கட்டமைப்பில் ‘பட்ஜெட்’ நிர்ணயம்
வீடுகள் கட்டமைப்பில் வீட்டின் மொத்த பட்ஜெட்டுக்கான தோராய மதிப்பீடு ஒன்றை தயார் செய்து கொள்ள வேண்டும்.
முதன்முதலாக சொந்த வீடு கட்டுபவர்கள் கட்டுமான பொறியாளர் மூலம் வீட்டுக்கான இறுதி வரைபடத்தை தயார் செய்து கொள்வதுடன், அவரிடம் வீட்டின் மொத்த பட்ஜெட்டுக்கான தோராய மதிப்பீடு ஒன்றையும் தயார் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். அதை மனதில் கொண்டு, வரைபடத்தை தக்க கட்டிட ஒப்பந்ததாரரிடம் காண்பித்து அதற்கான பட்ஜெட் தொகை பற்றி விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், அனைத்து பணிகளையும் செய்யும் வகையில் அவரிடம் பேசி, ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். எலக்ட்ரிகல், கார்பெண்டிங், பெயிண்டிங் போன்ற பணிகளை செய்ய ஒப்பந்ததாரர் மறுக்கும் நிலையில், அவற்றை செய்பவர்களை அணுகி, அவர்களிடம் கேட்டறிந்த மதிப்பீட்டுத் தொகைக்கேற்ப பணிகளை செய்யலாம் அல்லது அதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம்.
கட்டிடத்தின் வெளிப்புறத்தை அழகு செய்யும் (Elevation) பணிகளை ஒப்பந்ததாரர் கணக்கில் கொள்வது பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை. அவை தனிப்பட்ட செலவாக கணக்கிடப்படும் நிலையில், அதற்கான பட்ஜெட்டை தோராயமாக கணக்கிட்டு, அதற்கேற்ப பணிகள் செய்யப்படவேண்டும்.
வீடுகளில், பாத்ரூம்களை தேவைக்கேற்ப மட்டுமே அமைப்பது பல விதங்களில் ஏற்றதாக இருக்கும். சமையல் மற்றும் பூஜை அறை தவிர மற்ற எல்லா அறைகளுக்கும் அட்டாச்டுபாத்ரூம், பொதுவான பாத்ரூம், வீட்டுக்கு வெளிப்புறம் பாத்ரூம் என்று அமைக்க பலரும் விரும்புகிறார்கள். அதன் காரணமாக, அவற்றை சுத்தம் செய்யும் பணிகள், தண்ணீர் பயன்பாடு, குழாய்கள் அமைப்பு ஆகிய நிலைகளில் மொத்த பட்ஜெட்டில் செலவுகள் அதிகமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
வீடு அமைய உள்ள ஏரியா நிலவரப்படி, வீட்டின் கட்டுமான பணிகளுக்கு கணக்கிடப்படும் சதுரடிக்கான தொகையை, வீட்டின் வரைபடத்தில் உள்ளபடி, ஒவ்வொரு வேலைக்கும் கணக்கிட்டு செயல்படுவது அவசியம். அதன் மூலம் பட்ஜெட் எகிறாமல் பணிகளை செய்து முடிக்கலாம்.
Related Tags :
Next Story