‘ஸ்டீல்’ வீடுகள் கட்டமைப்பு


‘ஸ்டீல்’ வீடுகள் கட்டமைப்பு
x
தினத்தந்தி 24 Aug 2019 2:54 PM IST (Updated: 24 Aug 2019 2:54 PM IST)
t-max-icont-min-icon

கான்கிரீட்டை பிரதான மூலப்பொருளாக பயன்படுத்தியே பெரும்பாலான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதற்கு மாற்று தொழில் நுட்பமாக ஸ்டீல் கட்டமைப்புகள் உள்ளன.

கான்கிரீட் வீடுகளை விட அவற்றின் கட்டுமான கால அளவு கிட்டத்தட்ட 70 சதவிகிதம் குறைகிறது. மேலும், ஸ்டீல் வீடுகள் 3 சதவிகிதம் முதல் 6 சதவிகிதம் வரை இடத்தை மிச்சப்படுத்துகின்றன. அதன் அறை சுவர்களை ‘இன்சுலேட்டடு பேனல்’ (Insu-l-at-ed Pa-n-el) மூலம் அமைப்பதால் உட்புற வெப்பநிலை குறைகிறது. அதனால், குளிர் சாதனங்கள் உபயோகம் குறைந்து, கிட்டத்தட்ட 40 சதவிகித மின்சாரம் சேமிக்கப்படுகிறது. கான்கிரீட் வீடுகளின் எடையை விட ஸ்டீல் வீடுகள் எடை கிட்டத்தட்ட 75 சதவிகிதம் குறைவாக இருப்பதால், நில நடுக்கத்தை தாங்கி நிற்கும் தன்மை பெற்றதாக சொல்லப்படுகிறது. மறுசுழற்சி செய்யத்தக்க இரும்பு என்ற மூலப்பொருளை பயன்படுத்துவதால் ஸ்டீல் வீடுகள் சுற்றுச்சூழலை பாதிக்கும் கட்டுமான கழிவுகளை உருவாக்குவதில்லை.
1 More update

Next Story