சுவர்களை பாதுகாக்கும் ‘பெயிண்டிங்’ முறைகள்


சுவர்களை பாதுகாக்கும் ‘பெயிண்டிங்’ முறைகள்
x
தினத்தந்தி 31 Aug 2019 5:30 PM IST (Updated: 31 Aug 2019 5:30 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளின் சுவர்களையும் பாதுகாக்கும் ‘பெயிண்டிங்’ பற்றி பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற பெயிண்டர்கள் குறிப்பிடும் தகவல்கள் பற்றி இங்கே காணலாம்.

பட்டி பார்க்கும் விதம்

புது வீடுகளின் சுவர்களுக்கு ‘பெயிண்டிங்’ பணிகளை தொடங்கும் முன்னர் பட்டி பார்க்கும் பணிகளை செய்வது அவசியம். புதிய வீடுகளில் சிமெண்டு பூச்சு முடிந்த மூன்று வாரத்திற்கு பின்னால் நேரடியாக சுவரை பாதுகாக்கும் பட்டி பூச வேண்டும். அது சுவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். சில இடங்களில் முதலில் வெள்ளை சிமெண்டு அல்லது பிரைமர் பூசுவது உண்டு. ஆனால், பிரைமர் பூசி விட்டு, பின்னர் பட்டி பூசக் கூடாது என்பது பெயிண்டர்கள் பலரது கருத்தாகும்.

சுவரின் மேற்புறத் தன்மை

பட்டி பார்க்கப் பயன்படுத்தப்படும் தகடுகள் 3 அங்குல அகலம் முதல் 12 அங்குல அகலம் வரை இருக்கும். சுவருக்கான முதல் மேற்பூச்சான பட்டி என்பது சாதா பட்டி, சாதா பேஸ்ட் பட்டி உள்ளிட்ட பல நிறுவன தயாரிப்புகள் என்று பல வகைகளில் உள்ளன. சுவர்கள் சொரசொரப்பாக இருக்கும்போது அதிகமான அளவில் பட்டி தேவைப்படும். ஆனால், அது தரமாக இருக்கும். சுவர் பளபளப்பாக இருந்தால் பட்டி குறைவாகப் பிடிக்கும். அதனால், தரம் சற்று குறைவாக இருக்கலாம். பொதுவாக புதிய சுவர்களுக்கான பட்டி பார்க்கும் போது ஒன்றன் மீது ஒன்றாக இரண்டு முறை பார்ப்பது அவசியம். சில பகுதிகளில் உள்ள சுவர்களில் ‘ஏர் கிராக்’ என்று சொல்லப்படும் லேசான விரிசல்கள் இருக்கலாம். அந்த நிலையில், ‘பிளாஸ்டர் ஆப் பாரீஸ்’ கொண்டு பட்டி பார்ப்பது வழக்கம்.

தகுந்த ‘பிரஷ்’ வகைகள்

சுவர்களுக்கான ‘பெயிண்டிங்’ பணிகளில் ‘ரோலர் பிரஷ்’, கையால் அடிக்கும் பிரஷ், ஏர் கம்ப்ரஷர் ஸ்ப்ரே போன்றவை உள்ளன. பட்டி பார்க்கப்பட்ட சுவர்களில்தான் ‘ரோலர் பிரஷ்’ பயன்படுத்த இயலும். பட்டி பார்க்கப்படாத சுவர்கள் மேடுபள்ளமாக இருக்கும் காரணத்தால், ‘ரோலர் பிரஷ்’ பயன்படுத்தி பெயிண்டிங் செய்யப்பட்டால் சீராக இருக்காது. அதனால், கையால் அடிக்கும் பிரஷ் அனைத்து சுவர்களுக்கும் ஏற்றது.

Next Story