வண்ண மீன்கள் விளையாடும் கண்ணாடி தொட்டிகள்


வண்ண மீன்கள் விளையாடும் கண்ணாடி தொட்டிகள்
x
தினத்தந்தி 31 Aug 2019 12:17 PM GMT (Updated: 31 Aug 2019 12:17 PM GMT)

அழகிய வண்ண மீன்கள் துள்ளி விளையாடும் கண்ணாடி தொட்டிகள் அமைப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை பற்றி உள் அலங்கார வல்லுனர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம்.

குடியிருப்புகளில், கண்ணாடி தொட்டிகளில் மீன்களை வளர்ப்பதுதான் வழக்கம் என்றாலும், களிமண், சிமெண்டு, பைபர் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்ட தொட்டிகளும் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக, மீன்களின் வகைகள் மற்றும் அவற்றின் எண்ணிக்கையை பொறுத்து தொட்டியின் அளவு மாறுபடும். அதாவது, சண்டை குணம் கொண்ட ஆண் மீன்களை தொட்டியில் தனியாக வளர்ப்பதே பாதுகாப்பானது.

மீன் தொட்டியின் கூரை சூரிய ஒளி புகாதவாறு இருக்கவேண்டும். அதனால் குப்பைகள் மற்றும் பறவைகளின் எச்சம் ஆகியவற்றிலிருந்து தொட்டிகள் பாதுகாக்கப்படுகின்றன. பலவகை மீன்கள் வளரும் தொட்டிக்குள் சிறு கூழாங்கற்கள், செடிகள் கொண்டு அழகுபடுத்தினால் மீன்கள் உற்சாகமாக துள்ளி விளையாடுகின்றன. செயற்கையாக நீர்க்குமிழிகளை உருவாக்கும் ‘பில்ட்டர்’ வகைகள் தொட்டியில் பொருத்துவதுடன், அதன் தண்ணீரை 30 நாட்களுக்கு ஒரு முறை புதிதாக மாற்றுவதும் அவசியம்.

Next Story