கட்டுமான அமைப்புகளின் உறுதியை நிர்ணயிக்கும் சோதனை
சிங்கப்பூரில் ஒற்றை மாடி வீடுகளைத் தவிர்த்து அனைத்து அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடங்களிலும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டுமானச் சோதனைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரில் ஒற்றை மாடி வீடுகளைத் தவிர்த்து அனைத்து அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடங்களிலும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டுமானச் சோதனைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். அதே சமயம் வர்த்த ரீதியான கட்டுமான அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டுமானச் சோதனைகளை செய்வது அவசியம். கட்டிட அமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அந்த சோதனைகளை கட்டாயமாக்கியுள்ளது சிங்கப்பூர் கட்டிட கட்டுமான ஆணையம்.
கட்டிடங்களின் உறுதி குறித்து சோதனைகள் நடத்தப்படும் நிலையில் கீழ்க்கண்ட விதிகள் கடைபிடிக்கப்படும்.
* கட்டிடத்தின் கட்டுமான அம்சங்கள், கட்டமைப்பு போன்றவற்றை சோதனை செய்யும் பொறியாளர் கட்டிட கட்டுமான ஆணையத்தில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
* விரிசல்கள் உள்ள கட்டமைப்புகளின் தன்மை குறித்து ஆணையத்திடம், தமது பரிந்துரைகளைப் பொறியாளர் தெரிவிப்பார். விரிசல்களால் பிரச்சினை ஏதும் இல்லை என்ற நிலையில் கட்டிடத்தின் நம்பகத்தன்மை குறித்து சான்றிதழ் அளிக்கப்படும்.
* கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்கள் பற்றி முழுமையாக கணக்கில் கொள்ளப்படுவதுடன், கட்டமைப்பு பாதுகாப்பாக உள்ளதா, அதற்குள் பிறரை அனுமதிக்கலாமா என்பது குறித்தும் ஆராயப்படும்.
* ஒருவேளை சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்கு கூடுதல் பரிசோதகைள் அவசியம் என்ற நிலையில் பொறியாளர், ஆணையத்துக்கு கோரிக்கை அளிப்பார். அவரது பரிந்துரைகளையும், அறிக்கையையும் ஆய்வு செய்த கட்டுமான ஆணையம், தேவைப்படும் நிலையில் ஆணைய அதிகாரிகள் மூலம் சோதனைகளை மேற்கொள்ளும்.
* பின்னர் ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளுக்கு ஏற்ப மாற்றங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து கொள்வது கட்டிட உரிமையாளரது பொறுப்பாகும்.
Related Tags :
Next Story