உங்கள் முகவரி

சூழல் பாதுகாப்புக்கேற்ற கட்டுமான பொருள்கள் + "||" + Building Materials for Environmental Protection

சூழல் பாதுகாப்புக்கேற்ற கட்டுமான பொருள்கள்

சூழல் பாதுகாப்புக்கேற்ற கட்டுமான பொருள்கள்
இந்திய அளவில் பசுமை கட்டிடம் அமைப்பது குறித்த ஆர்வம் சமீப காலங்களில் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலும் பல்வேறு தனியார் மற்றும் அரசு அமைப்புகள் சுற்றுச்சூழலுக்கு எற்ற பசுமை கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, கார்பன்–டை ஆக்ஸைடு இல்லாத நிலக்கரி சாம்பல் செங்கற்களை பயன்படுத்தி கட்டுமானங்களை வடிவமைப்பதிலும், உமி சாம்பல் கலந்த சிமெண்டு மூலம் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் பிளாக்கை பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  ஒரு டன் சிமெண்டு உற்பத்தியில், கிட்டத்தட்ட அதே அளவு கார்பன்–டை ஆக்ஸைடு வெளிப்படுவதாக அறியப்பட்டுள்ளது. அதை தடுக்கும் விதத்தில், நிலக்கரி சாம்பல் வார்ப்புகளிலிருந்து கிடைக்கும் மணல், இரும்பு குழம்பு கலந்த ‘ஸ்லாக்’ மற்றும் ‘சிலிகாபியூம்’ ஆகிய பொருட்கள் சிமெண்டில் சேர்த்து கான்கிரீட் தயாரிக்கப்படுகிறது. சிமெண்டு கலப்பு இல்லாமல் நிலக்கரி சாம்பலால் தயாரிக்கப்பட்ட ‘ஜியோ பாலிமர் கான்கிரீட்’ பயன்பாடும் சூழலுக்கு ஏற்றதாக உள்ளது.