சுவர்களை பாதுகாக்கும் ‘நானோ’ பெயிண்டு
புதிய கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவற்றை வெளிநாடுகளில் இருந்தே பெற்று வந்த நிலையில் கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கும் நானோ பெயிண்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் தயாரிப்பாக உள்ள ‘நானோ பெயிண்டு’ பசுமைக் கட்டிடப் பொருளாக சொல்லப்படுகிறது. இதை தண்ணீர் கலந்தும் பயன்படுத்த இயலும். பெயிண்டில் கலப்பதற்கு வேறு ரசாயன பொருட்கள் எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெயிண்டு அடிக்கும் பொழுதும், அடித்த பிறகும் எவ்வித வாசனையும் இதில் வருவதில்லை என்று அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் காரணமாக பெயிண்டு அடித்த உடனே வீட்டில் குடியேறலாம் என்பது இந்த பெயிண்டின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. இப்பெயிண்டில் எவ்விதமான தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும் கிடையாது. மேலும், பெயிண்டு பூசப்பட்டு காயாமல் உள்ள சுவர் பரப்பை குழந்தைகள் அறியாமல் தொட்டுவிட்டாலும் பாதிப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை. பெயிண்டர்களுக்கு எவ்விதமான உடல் பாதிப்பும் இந்த பெயிண்டு விளைவிக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்பத்தை பிரதிபலிக்கும் வகை (Heat Reflecting) , உட்புறம் மற்றும் வெளிப்புறம் (Exterior Interior) பயன்படுத்தும் வகை, பாலிமர் அடிப்படையிலான கண்ணாடிகளுக்கான மேற்பூச்சு வகை (Nano Glass Coating) , உலோகப் பரப்புகள், மரத்தாலான பொருட்கள் ஆகியவற்றில் உபயோகிக்கும் வகை என்று பல விதங்களில் ‘நானோ’ பெயிண்டு வகைகள் தயாரிக்கப்பட்டு சந்தையில் கிடைக்கின்றன.
Related Tags :
Next Story