சொந்த வீடு கட்டமைப்பில் வல்லுனர் குறிப்புகள்


சொந்த வீடு கட்டமைப்பில் வல்லுனர் குறிப்புகள்
x
தினத்தந்தி 12 Oct 2019 4:45 PM IST (Updated: 12 Oct 2019 4:45 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள் அல்லது குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் முன்னர் கவனத்தில் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் பல இருக்கின்றன. அவை பற்றி பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற கட்டுனர்கள் மற்றும் பொறியாளர்கள் குறிப்பிட்ட தகவல்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

* சொந்த வீட்டை கட்டத் தொடங்கும் முன்னர், அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும். வீட்டுக்கான வரைபடத்தை அடிப்படையாக வைத்தும், இடத்தின் அளவு, நீளம், அகலம், சுற்றுப்புறத்தில் உள்ள கட்டமைப்பு வகைகள் போன்றவற்றை கவனித்தும், வீட்டின் அளவை பட்ஜெட்டுக்கு ஏற்ப முடிவு செய்துகொள்வது நல்லது.

* இறுதி முடிவு செய்யப்பட்ட வீட்டுக்கான பரப்பளவுக்குள், அனைத்து வசதிகளையும் கொண்ட கட்டுமானத்தை அமைப்பது குறித்து பொறியாளருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். அதன் அடிப்படையில் கச்சிதமான திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தேவைக்கும் அதிகமாக அமைந்த கட்டுமான அமைப்புகளின் பராமரிப்பு என்ற முறையில் எதிர்காலத்தில் பெரும் தொகை செலவு செய்ய வேண்டியதாக அமைந்து விடலாம்.

* தொடக்கத்திலேயே கட்டிடத்தின் பரப்பளவை தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். கட்டுமான பணிகளை தொடங்கிய பின்னர், பிளானை மாற்றி அமைப்பதன் மூலம், பட்ஜெட் அதிகமாவதுடன், பணிகள் நடப்பதிலும் கால தாமதம் ஏற்படும்.

* மண் பரிசோதனைக்கேற்ப கட்டிடத்தின் அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். வீட்டு மனை தாழ்வான பகுதியில் இருந்தால் சாலை மட்டத்திற்கு ஏற்ப கட்டமைப்பின் அடித்தளத்தை தகுந்த அளவிற்கு உயரமாக அமைப்பதும் அவசியம்.

* தேவைக்கேற்ப கட்டுமான பொருட்களை இருப்பு வைத்திருப்பதுடன், தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும். தேவைக்கேற்ப மட்டுமே சிமெண்டு மூட்டைகளை இருப்பில் வைத்திருப்பது நல்லது. விலை காரணமாக அதிகப்படியாக வாங்கி, ஸ்டோர் ரூமில் ‘ஸ்டாக்’ வைத்திருப்பது பாதுகாப்பான முறையல்ல.

* சற்று பெரிய அளவுள்ள வீட்டின் கட்டுமான பணிகளில் ஒவ்வொரு நிலையிலும், தக்க வல்லுனர்கள் அல்லது அனுபவம் பெற்றவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. கட்டுமான பொருட்களின் தரம், உறுதி, தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில், அவற்றை முன்னரே பயன்படுத்தியவர்கள் அல்லது வல்லுனர்களிடமும் கேட்டு அறியலாம்.


Next Story