உங்கள் முகவரி

கட்டுமான பணி இடங்களுக்கான ‘ரெடிமேடு’ அலுவலகம் + "||" + Readymade office for construction sites

கட்டுமான பணி இடங்களுக்கான ‘ரெடிமேடு’ அலுவலகம்

கட்டுமான பணி இடங்களுக்கான ‘ரெடிமேடு’ அலுவலகம்
கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் அலுவலக நிர்வாகப் பணிகளை கவனிப்பதற்காக தனிப்பட்ட இடம் என்பது அவசியமானது. பணிகள் நடக்கும் இடங்களில் ஏதாவது ஒரு பகுதியை தேர்வு செய்து அங்கே நிர்வாக விஷயங்களை கவனிக்க வேண்டியதாக இருக்கும்.
கட்டிட பணிகள் நடந்து வரும் நிலையில், அந்த இடங்களில் எளிதாக தூசிகள் படிவதன் காரணமாக பலருக்கு அலர்ஜி ஏற்படலாம். மேலை நாடுகளில் இந்த சிக்கலுக்கு மிக எளிதான தீர்வை கண்டறிந்துள்ளனர். 

அதாவது, நான்கு பக்கங்களிலும் ‘பிளாஸ்டிக் ஷீட்’ மூலம் ‘டஸ்ட் பாரியர் சிஸ்டம்’ என்ற வகையில் தடுப்புகள் அமைத்து, ஒரு பக்கமாக திறந்து மூடும் வகையில் ‘ஜிப்’ பொருத்தப்படும். அதன் வழியாக உள்ளே சென்று வருவது எளிதாக இருக்கும். மேலும், வெளிப்புறத்தில் உள்ள தூசிதுரும்புகள் பாதிப்பு இல்லாமல் நிர்வாக பணிகளை கவனிக்க இயலும்.

இந்த தடுப்பு அமைப்பை பொருத்துவதற்கு எவ்விதமான கருவி அல்லது ஒட்டுவதற்கான ‘டேப்’ ஆகியவை அவசியமில்லை. 4 அடி முதல் 18 அடி வரையிலும் அளவுகள் கொண்டதாக அந்த ‘பிளாஸ்டிக் ஷீட்கள்’ கிடைப்பதால் எளிதாக வேண்டிய அளவு மற்றும் உயரம் ஆகியவை கொண்ட தடுப்பு அமைப்பை உருவாக்கிக்கொள்ளலாம். 8 முதல் 10 அடி உயரம் கொண்டதாகவும் இவை சந்தையில் கிடைக்கின்றன. 

இரண்டு ஆட்கள் சுமார் 30 நிமிடங்களில் இந்த தடுப்பு அமைப்பை எவ்விதமான உபகரணமும் இல்லாமல் எளிதாக அமைத்து விடலாம். இவை மறு சுழற்சி பொருளாகவும் இருப்பதால் பலமுறை பயன்படுத்த ஏற்றவை என்பதும் கவனிக்கத்தக்கது. இவற்றைக்கொண்டு அறைகள் அமைப்பது மட்டுமல்லாமல் தூசிகள் படியாமல் தனிப்பட்ட இடத்தை பாதுகாக்கவும் இயலும்.