கட்டுமான பணிகளில் தண்ணீர் சிக்கனம்


கட்டுமான    பணிகளில் தண்ணீர்    சிக்கனம்
x
தினத்தந்தி 19 Oct 2019 4:00 AM IST (Updated: 18 Oct 2019 6:53 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமானப் பணிகளில் சிமெண்டு, மணல், இரும்புக் கம்பி ஆகிய மூலப்பொருட்கள் போல தண்ணீரையும் ஒரு கட்டுமான மூலப்பொருளாகவே கருதப்பட வேண்டும் என்று கட்டுனர்கள் மற்றும் சிவில் பொறியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ட்டுமானப் பணிகளில் சிமெண்டு, மணல், இரும்புக் கம்பி ஆகிய மூலப்பொருட்கள் போல தண்ணீரையும் ஒரு கட்டுமான மூலப்பொருளாகவே கருதப்பட வேண்டும் என்று கட்டுனர்கள் மற்றும் சிவில் பொறியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

சிக்கன முறைகள் 

சமீபத்திய தண்ணீர் பற்றாக்குறை நிலவரத்தில் பல இடங்களிலும் நடைபெற்று வந்த கட்டுமான பணிகளில் கால தாமதம் ஏற்பட்டதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் எல்லா காலத்திற்கும் பொருத்தமாக இருக்கக்கூடிய வகையில் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தும் முறைகள் பற்றி கட்டுமானப் பொறியாளர்கள் அளித்த குறிப்புகளை இங்கே காணலாம்.

தண்ணீர் சேமிப்பு

சுமார் 100 சதுர அடி அளவுள்ள கட்டுமான பணிகளுக்கு சுமாராக 250 கிலோ லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதனால், போர்வெல் மூலம் பெறப்படும் நீரை நேரடியாக பயன்படுத்துவதற்கு பதிலாக பெரிய பேரல்கள், தொட்டிகள் ஆகியவற்றில் சேமித்து பயன்படுத்துவது நல்லது. 

சிக்கனமான ‘கியூரிங்’ 

இயங்கும் மோட்டார் மூலம், பைப் கொண்டு தண்ணீரை பீச்சி அடித்து ‘கியூரிங்’ பணிகளை செய்வதற்கு பதிலாக, நீரை கோப்பை அல்லது சிறு வாளிகளில் எடுத்து சுவர்களின் மீது தேவைக்கேற்ப நன்றாக ஈரமாகும்படி தெளிக்கலாம்.

பில்லர் போன்ற கான்கிரீட் அமைப்புகளை சுற்றி கனமான சாக்கு பைகளை கட்ட வேண்டும். அதன் மேற்புறத்தில் பெரிய பிளாஸ்டிக் ‘டிரம்’ பொருத்தி அதில் நீரை நிரப்பி, அடிப்பகுதியில் சிறு துளையிட்டு விட்டால் நீர் சாக்குப்பை மீது சொட்டுச்சொட்டாக விழும். அவ்வாறு பில்லர்கள் ஈரமாவதன் காரணமாக குறைவான  தண்ணீர் செலவில் ‘கியூரிங்’ செய்யலாம். 

கியூரிங் பணிகளில் ‘ஸ்பிரே’ முறையில் தண்ணீரை பயன்படுத்தினால், மொத்த பயன்பாட்டில் சுமார் 10 சதவிகிதம் தண்ணீரை சேமிக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது.

நீரின் தரம் அவசியம்

கட்டுமானப் பணிகளை செய்ய ஏற்ற வகையில் இல்லாத தண்ணீரை பயன்படுத்துவதால் கட்டிடம் பாதிக்கப்படலாம். 

அதனால், கட்டிடங்களுக்கு பயன்படுத்தும் நீரின் தரம் குடிநீர்போல் இருக்க வேண்டும். தண்ணீரில் உள்ள றிபி அளவு (ஹைட்ரஜன் பொட்டென்ஷியல்) 6 முதல் 7 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும் என்பது இந்திய தர நிர்ணயக் கோட்பாடு ஆகும். 6–க்கு கீழே இருந்தால் அமிலத்தன்மையையும், 8–க்கு மேல் இருந்தால் காரத்தன்மையும் உடையது என்று குறிப்பிடப்படும். அதன் காரணமாக, போர்வெல் தண்ணீரை கட்டிட வேலைக்கு உகந்ததா என பரிசோதித்து அறிந்த பின்னர் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.

Next Story