சுவர் விரிசல்களை தடுக்கும் ‘பீம்’ கட்டமைப்பு
கட்டிடத்தின் மொத்த எடையைத் தாங்கி நிற்கும் அஸ்திவாரம் மற்றும் சுவர் ஆகியவற்றுக்கு இடையில் ‘பிளிந்த் பீம்’ அமைக்கப்படுவது அவசியம் என்பதை கட்டுமான வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கட்டிடத்தின் மொத்த எடையைத் தாங்கி நிற்கும் அஸ்திவாரம் மற்றும் சுவர் ஆகியவற்றுக்கு இடையில் ‘பிளிந்த் பீம்’ அமைக்கப்படுவது அவசியம் என்பதை கட்டுமான வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆர்.சி.சி கட்டமைப்பான அது தமிழகத்தின் மேற்கு பகுதிகளில் ‘பெல்ட் பீம்’ அல்லது ‘பெல்ட் கான்கிரீட்’ என்று குறிப்பிடப்படுகிறது.
கருங்கல் அஸ்திவாரம் கொண்ட கட்டிடங்களுக்கு ‘பிளிந்த் பீம்’ மிகவும் அவசியமானது. காரணம், அஸ்திவார பணிகள் முடிந்த பின்னர் அதன் மீது செங்கல் சுவரை நேரடியாக அமைப்பதால் காலப்போக்கில் ‘செட்டில்மெண்டு’ எனப்படும் தரை மட்ட அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக சுவர்களில் விரிசல்கள் உருவாகலாம்.
‘சூப்பர் ஸ்ட்ரக்சர்’ என்று சொல்லப்படும் தரை மட்டத்துக்கு மேல் அமைக்கப்படும் கட்டமைப்பு, ‘சப் ஸ்ட்ரக்சர்’ என்று சொல்லப்படும் தரை மட்டத்துக்கு கீழ் உள்ள கட்டமைப்பு ஆகிய இரண்டுக்கும் இடையில் கட்டிடத்தை கச்சிதமாக இணைப்பது ‘பிளிந்த் பீம்’ ஆகும்.
மேலும், கட்டிடத்தின் எடையை பரவலாக அஸ்திவாரம் மூலம் தரைப்பகுதிக்கு செலுத்தும் அமைப்பாகவும் அது செயல்படுகிறது. அதனால், காலப்போக்கில் தரைமட்டத்தில் உள்ள மண்ணின் தன்மை மாற்றம் காரணமாக, அஸ்திவாரத்தின் சமநிலை மாற்றம் காரணமாக சுவர்களில் உருவாகும் விரிசல்கள் தவிர்க்கப்படும்.
வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் வெளிப்புற சாலை மட்டத்திலிருந்து சுமார் இரண்டு அல்லது இரண்டரை அடி உயரத்தில் ‘பிளிந்த் பீம்’ அமையும்படி ‘பிளான்’ செய்யப்படுவது வழக்கம். குறிப்பிட்ட ஒரு பகுதியில் வீடு கட்டப்படும்போது அதன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பிரதான சாலை மற்றும் இணைப்புச்சாலை ஆகியவற்றின் மட்டத்தையும் கணக்கில் கொள்வது அவசியம்.
எதிர்காலத்தில் அந்த சாலைகள் உயர்த்தப்படும்போது, அதற்கேற்ப வீட்டின் தளமட்டம் சமமாகவோ அல்லது தாழ்வாகவோ அமைந்து விடக்கூடாது. அவ்வாறு அமைந்தால் சாலையில் தேங்கும் மழைநீர் வீட்டிற்குள் வந்து விடலாம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
Related Tags :
Next Story