கான்கிரீட் கட்டமைப்புகளை பாதுகாக்கும் தொழில்நுட்பம்
கட்டுமானங்களின் வடிவமைப்பில் பிரதான மூலப்பொருளாக உள்ள கான்கிரீட் பல்வேறு சூழல்களில் தயார் செய்யப்படுகிறது.
கட்டுமானங்களின் வடிவமைப்பில் பிரதான மூலப்பொருளாக உள்ள கான்கிரீட் பல்வேறு சூழல்களில் தயார் செய்யப்படுகிறது. அதனால், கான்கிரீட் கலக்கப்பட்டு பசுமையாக இருக்கும் நிலையிலும், கட்டியாக இறுகிய நிலையிலும் அதன் தன்மை எப்படி இருக்கிறது என்பதை பரிசோதித்துப் பார்க்க வேண்டும். சாதாரணமாக, கலக்கப்பட்டு பசுமையாக இருக்கும் கான்கிரீட்டின் தன்மையை சோதிப்பதற்கு கூம்பு கசிவு சோதனை உள்ளிட்ட சில சோதனைகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு சோதனை முடிவுகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடானது சராசரியாக 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது. அதன் அடிப்படையில் கான்கிரீட் உறுதி, உடையும் தன்மை, நுண்ணிய விரிசல்கள் ஆகிய குறைகள் கண்டறியப்படுகின்றன.
துருவால் பாதிப்பு
பெரிய கட்டிடங்களின் கட்டுமான பணிகளின்போது மேற்குறிப்பிட்ட கான்கிரீட் தரநிலை சோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்று கட்டுமான பொறியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இல்லாவிட்டால் காலப்போக்கில் கட்டிடங்களில் ஈரப்பதம் ஊடுருவி, ஆர்.சி.சி கம்பிகளில் துரு ஏற்பட்டு அரிக்கப்படுகின்றன. அதனால், விரிசல்கள் உருவாகி கட்டிடம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கான்கிரீட்டில் ஏற்படும் கண்ணுக்குத் தெரியாத ‘மைக்ரோபோர்ஸ்’ என்ற நுண்ணிய விரிசல்கள் காரணமாக அதில் உள்ள இரும்பு கம்பிகள் சில வருடங்களில் துருப்பிடித்து விடுகின்றன. அதை தடுக்கும் தொழில்நுட்ப முறைகள் தற்போது நடைமுறையில் இருந்து வருகின்றன.
‘மைக்ரோ சிலிக்கா’
உலக நாடுகளில் நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் விளைவாக கட்டுமான அமைப்புகள் நீடித்து உழைப்பதற்கும், சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் உதவும் வலிமையான மூலப்பொருளாக ‘ஹை ஸ்ட்ரென்த் மைக்ரோசிலிக்கா’ இருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, வலிமையான இழைகள் மற்றும் காலநிலை வேறுபாடுகளை தாங்கி நிற்கும் வலிமையான நுண் துகள்கள் அவற்றில் அடங்கி இருப்பது சோதனைகள் மூலம் அறியப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் மைக்ரோ சிலிக்காவில் லட்சக்கணக்கான ‘பைபர் ரீ–இன்போர்ஸ்டு’ மூலக்கூறுகள் இருக்கின்றன. அதன் காரணமாக கான்கிரீட் அமைப்புகளை நீராற்றும்போது ஏற்படும் நுண்ணிய சுருக்க விரிசல்கள் உருவாகாமல் பாதுகாக்கப்படுகின்றன.
நமது பகுதிகளில் தயாரிப்பு
மைக்ரோ சிலிக்கா என்பது கான்கிரீட் கலவைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தனித்தனியே பிரியாமல் இணைந்து ஒரே சீராக இருக்க உதவியாக இருப்பதுடன் சுருக்க விரிசல்கள் மற்றும் நுண்ணிய விரிசல்கள் ஏற்படாமலும் கட்டுப்படுத்துகிறது. கான்கிரீட்டின் வளைவுத்திறன், அழுத்தத்திறன் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. நமது பகுதிகளில் ஒரு சில தனியார் நிறுவனங்கள் ‘மைக்ரோ சிலிக்கா’ மூலப்பொருளை தயாரித்து அளிப்பதாக தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story