மின்சார அதிர்ச்சியை தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு


மின்சார  அதிர்ச்சியை  தடுக்கும் பாதுகாப்பு  அமைப்பு
x
தினத்தந்தி 18 Oct 2019 9:30 PM GMT (Updated: 18 Oct 2019 2:19 PM GMT)

வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் வழியாக மின்சாரம் செல்லும்போது பேஸ் லைன், நியூட்ரல் லைன், எர்த் லைன் ஆகியவை ஒன்றோடு ஒன்று ‘ஷார்ட்’ ஆகும் நிலையில் ELCB அமைப்பு டிரிப் முறையில் மின்சாரத்தை துண்டித்து விடும்.

வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் வழியாக மின்சாரம் செல்லும்போது பேஸ் லைன், நியூட்ரல் லைன், எர்த் லைன் ஆகியவை ஒன்றோடு ஒன்று ‘ஷார்ட்’ ஆகும் நிலையில் ELCB (Earth Leakage Circuit Breaker)    அமைப்பு டிரிப் முறையில் மின்சாரத்தை துண்டித்து விடும். பின்னர், பழுதை சரிசெய்து ELCB –யை ஆன் செய்து கொள்ளலாம். இந்த அமைப்பில் 3 பேஸ், சிங்கிள் பேஸ் இணைப்புகளை தருவதற்கேற்ற வகையில் துளைகள் இருக்கும். 3 பேஸ் என்றால் நான்கு வயர்களுக்கு நான்கு துளைகளும், சிங்கிள் பேஸ் என்றால் இண்டு வயர்களுக்கு இரண்டு துளைகளும் இருக்கும். கீழே உள்ள துளை ‘இன்புட்’, மேலே உள்ள துளை ‘அவுட்புட்’ ஆகும். வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் சிறிது ‘லீக்’ ஆனாலும் ELCB உபகரணம் ‘டிரிப்’ முறையில் மின்சாரத்தை தடுத்துவிடும்.

Next Story