உங்கள் முகவரி

எச்சரிக்கை அலாரம் + "||" + Warning Alarm

எச்சரிக்கை அலாரம்

எச்சரிக்கை அலாரம்
இன்றைய காலகட்டத்தில் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. பகலில் யாரும் இல்லாதபோது வீட்டுக்குள் அன்னியர்கள் துழைந்தால் எச்சரிக்கை செய்யும் அலாரம் அமைப்பு (Burglar Alarm or Intruder Alarm) உள்ளது.
வீட்டில் இல்லாத நேரத்தில் அல்லது இரவில் உறங்கும்போது யாரேனும் வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்தால் தானியங்கி அலாரம் ஒலிக்கும். மேலும், அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி அல்லது மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கும். 

அதற்கான மறுமொழி கிடைக்காத நிலையில், அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது தீயணைப்பு நிலையம் ஆகியவற்றிற்கு தகவல் அனுப்பும் வகையிலும் ‘செட்டிங்’ செய்து கொள்ளலாம். இந்த உபகரணம் சென்சார் மற்றும் கண்ட்ரோல் பேனல் ஆகிய இரண்டு அடிப்படையில் இயங்குகிறது.