கட்டிட வடிவமைப்பில் எட்டு திசைகள்
பூமியில் செயல்படும் காந்தப்புலத்தை அடிப்படையாக கொண்டு நான்கு முக்கிய திசைகள் மற்றும் அவை இணையும் நான்கு கோண திசைகள் ஆகிய எட்டு திசையமைப்புகள் கட்டிட வடிவமைப்புகளில் கணக்கில் கொள்ளப்படுகின்றன.
கட்டிடம் எவ்வகையாக இருந்தாலும், திசைகாட்டி குறிப்பிடும் திசையமைப்புக்கு இணையாக அதன் சுவர்கள் மற்றும் வாசல்கள் அமைய வேண்டும் என்பது வாஸ்துவின் முக்கிய விதியாகும்.
உலக அளவில் புகழ் பெற்ற கட்டிடங்கள் அனைத்தும் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களின் மையப்புள்ளியை இணைக் கும் நேர்கோட்டிற்கு இணையாக அதன் சுவர்கள் உள்ளதுபோல கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உதாரணமாக நமது நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல கட்டிடங்களை சொல்லலாம். உலக நாடுகள் பலவற்றிலும் அவர்களது பாரம்பரியத்திற்கேற்ற வாஸ்து முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.
Related Tags :
Next Story