மின்சார பயன்பாட்டில் மெயின் இணைப்பு


மின்சார பயன்பாட்டில் மெயின் இணைப்பு
x
தினத்தந்தி 7 Dec 2019 10:38 AM GMT (Updated: 7 Dec 2019 10:38 AM GMT)

வீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்புகள் அனைத்தையும் ‘ஆன்’ அல்லது ‘ஆப்’ செய்யும் அமைப்பு ‘மெயின்’ ஆகும்.

வீட்டிற்குள் தக்க வயர்கள் மூலம் எடுத்துச்செல்லப்படும் மின்சாரம் இதை கடந்துதான், மின்  சாதனங்களுக்கும் செல்ல வேண்டும். எதிர்பாராத நிலையில் வீட்டில் உள்ள மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்ய மெயின் இணைப்பு சுவிட்சை ‘ஆப்’ செய்து விட்டால், வீட்டிற்கு செல்லும் மொத்த மின்சாரமும் தடுக்கப்பட்டு விடும். அதன் பின்னர், பழுது ஏற்பட்ட மின் சாதனத்தையோ, வயரையோ சரி செய்த பின்னர், மீண்டும் மெயின் இணைப்பு சுவிட்சை ‘ஆன்’ செய்து கொள்ளலாம்.

Next Story