அடுக்குமாடி வீடு வாங்குபவர்களுக்கு சி.எம்.டி.ஏ. ஆலோசனை


அடுக்குமாடி வீடு வாங்குபவர்களுக்கு சி.எம்.டி.ஏ. ஆலோசனை
x
தினத்தந்தி 7 Dec 2019 4:33 PM IST (Updated: 7 Dec 2019 4:33 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புறங்களில் சொந்தமாக வீடு வாங்க விரும்புபவர்களின் தேர்வு பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்பாகத்தான் இருக்கிறது.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் தனது இணையதளத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு தெரிவித்துள்ள ஆலோசனைகளை இங்கே காணலாம்.

1) அங்கீகாரம் பெற்ற வரைபடம் குறித்த விவரங்கள் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.

2) அங்கீகாரம் பெற்ற வரைபடத்தின்படி சம்பந்தப்பட்ட அடுக்குமாடி கட்டப்பட்டிருப்பதை சோதித்து அறிய வேண்டும்.

3) மனையின் உரிமையாளர் அல்லது அவரால் பொது அதிகார உரிமை அளிக்கப்பட்ட நபருக்கு, பிரிக்கப்படாத மனை பகுதியை சொத்து உரிமை மாற்றம் செய்யும் உரிமை இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம்.

4) மனையின் உரிமையாளர் அல்லது மனை உரிமையாளரால் பொது அதிகார உரிமை அளிக்கப்பெற்றவர் பிரிக்கப்படாத மனையின் மொத்த பகுதியையும் அடுக்குமாடி குடியிருப்பை வாங்குபவர்களுக்கு மாற்றம் செய்து அளித்துள்ளாரா என்பதையும் கட்டாயம் கவனித்து அறிந்து கொள்ள வேண்டும்.

5) கட்டுமான பணிகள் முடிந்த பின்னர், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபடத்தின்படி கட்டிடப் பணிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும், கட்டிடத்திற்கான பணி நிறைவு சான்றிதழை கட்டுனர் அல்லது மனை மேம்பாட்டாளர் பெற்றுள்ளரா என்பதையும் கவனிப்பது முக்கியம்.

6) மேலும், அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும்போது வேறு ஏதாவது சந்தேகம் இருப்பவர்கள் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு மையத்தினை தொடர்பு கொள்ளலாம்.

Next Story