உங்கள் முகவரி

நவீன தொழில்நுட்பத்தில் உருவாகும் ‘அக்ரிலிக் பர்னிச்சர்’ + "||" + Modern technology develops acrylic furniture

நவீன தொழில்நுட்பத்தில் உருவாகும் ‘அக்ரிலிக் பர்னிச்சர்’

நவீன தொழில்நுட்பத்தில் உருவாகும் ‘அக்ரிலிக் பர்னிச்சர்’
கதவு, ஜன்னல், அலமாரி, மேஜை மற்றும் சேர்கள் போன்ற பர்னிச்சர் பொருட்கள் மரங்களால் தயாரிக்கப்படுவதுதான் வழக்கத்தில் இருந்து வந்தது.
காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக கான்கிரீட் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றாலும் மேஜைகள் மற்றும் சேர்கள் உருவாக்கப்பட்டன. இன்றைய காலகட்டத்தில் வீட்டு உபயோகப் பொருட்களில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. அதன் அடிப்படையில் பர்னிச்சர் தயாரிப்புகளில் மாற்று தொழில் நுட்ப முறையாக ‘அக்ரிலிக்’ (Acrylic or lucite furniture) தயாரிப்புகள் உள்ளன.

80 ஆண்டுகள் பழமை

‘பாலிமரை’ மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் ‘அக்ரிலிக்’ சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப நிலையில் ஆடைகள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. அதன் பயன்கள் மற்றும் உறுதியான தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கட்டுமான பணிகளில் ‘ரெடிமேடு’ சுவர்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக தற்போது ‘பர்னிச்சர்கள்’ தயாரிக்கவும் பயன்படுகின்றன.

பராமரிக்க எளிது

கண்ணாடி போன்ற பளபளப்பும், ஒளியை சுலபமாக கடத்தக்கூடிய தன்மையும் கொண்ட ‘அக்ரிலிக்’ பர்னிச்சர் பொருட்கள் ‘பைபரை’ விடவும் வலிமையானது. எளிதாக அவற்றை வேண்டிய அளவுகளில் துண்டித்து பயன்படுத்தலாம் என்பதால் அதன் பயன்பாடு அதிகமாகியுள்ளது. ஹாலில் போடப்படும் ‘காபி டேபிள்’, உணவு அறை மேசை, சேர்கள் மற்றும் தண்ணீர் பயன்பாடு உள்ள பகுதிகளில் பயன்படுத்தும் பொருட்கள் ‘அக்ரிலிக்’ வகையாக இருந்தால் எளிதாக பரமரிக்க இயலும்.

எளிதில் உடையாது

ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதால் வண்ண மீன்கள் துள்ளி விளையாடும் தண்ணீர் தொட்டிகள் தயாரிக்க இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. கண்ணாடி போன்று தோற்றம் தந்தாலும் எளிதாக உடையாது. காரணம், ‘அக்ரிலிக்’ மூலக்கூறுகள் வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ளன.

மரங்களுக்கு மாற்று

சோபா, சாப்பாட்டு மேஜை, இருக்கைகள், அலமாரிகள், ஊஞ்சல் பலவித பொருட்களை ‘அக்ரிலிக்’ கொண்டு தயார் செய்யப்பட்டு, தற்போது சந்தையில் கிடைக்கின்றன. சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் கைக்கு அடக்கமான விலை ஆகிய காரணங்களால், பர்னிச்சர் தயாரிப்பில் மரங்களுக்கு மாற்றாக உள்ள இந்த தொழில்நுட்பத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என்பது உள் அலங்கார நிபுணர்களில் கருத்தாக உள்ளது.

உள்நாட்டு தயாரிப்புகள்

மர பர்னிச்சர்களை விட ‘அக்ரிலிக்’ பர்னிச்சர்கள் பயன்படுத்த எளிதானவை. குறிப்பாக, அவை மறு சுழற்சிக்கு உட்பட்டதாக இருப்பது கவனிக்கத்தக்கது. மேலும், தொழிற்சாலைகளில் முழுமையாக தயார் செய்யப்பட்டு வெளிவருவதால் தரமான பொருளாக இருப்பதை உறுதி செய்து கொள்ள இயலும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலை மாறி, இப்போது நமது நாட்டிலேயே ‘அக்ரிலிக்’ பர்னிச்சர்கள் தயாரிக்கப்படு கின்றன.