அழகிய வீட்டுக்கு கண்கவர் தரைத்தளம்


அழகிய வீட்டுக்கு கண்கவர் தரைத்தளம்
x
தினத்தந்தி 14 Dec 2019 9:48 AM GMT (Updated: 14 Dec 2019 9:48 AM GMT)

வீடுகளுக்கான கட்டுமானப்பணிகளில் ஐந்தாவது சுவராக குறிப்பிடப்படும் தரைத்தளம் மூலம் வீட்டின் உள் அலங்கார அழகை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.

தரைத்தளம் அமைப்பதில் பழைய முறைகளான சிமெண்டு தரை, ரெட் ஆக்ஸைடு தரை ஆகியவை மாற்றம் பெற்று டைல்ஸ், மார்பிள், செராமிக், மரத்தாலான தரைத் தளங்கள், கிளாஸ் மற்றும் 3டி அமைப்பு என்று நவீன மாற்றங்களை அடைந்துள்ளன. டைல்ஸ் வகைகள் பட்ஜெட் அடிப்படையில் பலருக்கும் ஏற்றதாக உள்ளன.

அவற்றை விரும்பிய டிசைன்களில் ஆர்டர் கொடுத்தும் பெற்றுக்கொள்ளலாம். பல்வேறு வடிவங்கள், வண்ணங்கள் ஆகியவற்றில் தற்போது ‘வெர்டிபைடு டைல்ஸ்’ வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. இதர வகைகளை விட டைல்ஸ் தரைத்தளம் சிக்கனமாகவும், நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்கும். குறிப்பாக, பாத்ரூம், வராண்டா போன்ற இடங்களில் கால்களுக்கு நல்ல பிடிப்பு தரக்கூடிய டைல்ஸ் வகைகளை பதிக்கவேண்டும்.

Next Story