வாஸ்து புருஷன் நிலைக்கேற்ப பூமி பூஜை


வாஸ்து புருஷன் நிலைக்கேற்ப பூமி பூஜை
x
தினத்தந்தி 14 Dec 2019 10:30 AM GMT (Updated: 14 Dec 2019 10:30 AM GMT)

வாஸ்து புருஷன் தலையை வடகிழக்கு பகுதியிலும், கால்களை தென்மேற்கு பகுதியிலும் வைத்து கவிழ்ந்து படுத்துள்ள நிலையானது நித்ய வாஸ்து என்று குறிப்பிடப்படுகிறது. அது, மாறாத பொது நிலையாகும்.

வாஸ்து புருஷன் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கிழக்கிலும், மார்கழி, தை, மாசி மாதங்களில் தெற்கிலும், பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மேற்கிலும், ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வடக்கிலும் தலை வைத்து படுத்திருக்கும் சர வாஸ்து நிலையும் பூமி பூஜையின்போது கணக்கில் கொண்டு, தலைவாசல் அமைக்கப்படுகிறது.

வீடுகள் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டுமானங்கள் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை சுபத்துவம் பெற்ற திதி, நட்சத்திரம் மற்றும் யோகம் உள்ளதாகவும், சனி, செவ்வாய் ஆகிய நாட்களை தவிர்த்தும் வரக்கூடிய நல்ல நாளில் ஆரம்பம் செய்வது ஐதீகம். மனை அல்லது கட்டிட உரிமையாளர் அமைதியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு, சுப தினத்தில் வரக்கூடிய நல்ல நேரத்தில் பூமி பூஜைகளை செய்வது அவசியம் என்று வாஸ்து நூல்கள் கூறியிருக்கின்றன.

Next Story