உள்கட்டமைப்புக்கு வழிகாட்டும் சிறப்பு தொழில்நுட்ப மையம்
பொதுமக்களுக்கு நிலையான உறைவிடம் மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு பயனுள்ள மற்றும் மதிப்புமிக்க சுற்றுச்சூழலை ஏற்படுத்த அரசு திட்டமிட்டது.
தமிழக அரசு தொலைநோக்குத் திட்டம், 2023ன்படி கட்டுமானத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு மையங்களை ஏற்படுத்த வழி காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT-M) , நகரமயமாதல் கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சிறப்பு மையம் (Centre For Urbanization Buildings And Environment - CUBE) 2017ம் ஆண்டு மே மாதத்தில் அமைக்கப்பட்டது. அதில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன.
இந்த அமைப்பானது, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம், அரசின் ஆதரவு மற்றும் தனியார் துறையின் புதுமையான அணுகுமுறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நகர்ப்புற வளர்ச்சியில் உருவாகும் புதிய சவால்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. கட்டுமானங்கள், சுற்றுச்சூழல், நீடித்த நிலையான தன்மை, நகர திட்டமிடுதல், போக்குவரத்து ஆகிய நிலைகளில் இந்த அமைப்பு தனது பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் செயல்முறை சார்ந்த ஆராய்ச்சி, தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் ஆலோசனை ஆகிய நிலைகளில் சவாலான பணிகளை மேற்கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய நிலைகளில் இந்த மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீர், கழிவுநீர், திடக்கழிவுகளுக்கான சோதனை மற்றும் பகுப்பாய்வு ஆகிய சேவைகளை அளிக்கும் சுற்றுச்சூழல் ஆய்வகத்தை (CUBE Environment Laboratory - CEL) இந்த மையம் ஜூன்2019 முதல் செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளான சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம், தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம் (TNSLURB) , மாநில திட்டக் குழு (SPC) , மாவட்ட கிராம வளர்ச்சி முகைமை (DRDA) , பொதுப்பணித் துறை, தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகம் (TNRIDC) உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளுடன் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங் களுக்கான பங்களிப்பை அளித்து வருகிறது.
தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம், தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம் (TNSLURB) , மாநில திட்டக் குழு (SPC) , மாவட்ட கிராம வளர்ச்சி முகைமை (DRDA) , பொதுப்பணித் துறை, தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகம் (TNRIDC) உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு துறைகளுடன் பல்வேறு திட்டங்களுக்காக இணைந்து செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு துறைகள் மட்டுமல்லாமல் இம்மையம் இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், மத்திய பொதுப் பணித் துறை, ஆந்திர பிரதேச தலைநகர் பிரதேச வளர்ச்சிக் குழுமம், ஒடிசா அரசு, டாமன் மற்றும் டையு நிர்வாகம் மற்றும் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய அளவிலும் செயல்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story