குளியலறை பராமரிப்பில் அவசியமான குறிப்புகள்


குளியலறை பராமரிப்பில் அவசியமான குறிப்புகள்
x
தினத்தந்தி 25 Jan 2020 11:13 AM GMT (Updated: 25 Jan 2020 11:13 AM GMT)

வீட்டின் சுகாதாரம் குளியலறையிலிருந்து தொடங்குகிறது என்று உள்கட்டமைப்பு வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். நகர்ப்புற வளர்ச்சி காரணமாக ஏற்பட்ட அடுக்குமாடி கலாசாரத்தில் ‘அட்டாச்டு’ குளியலறை வசதி படுக்கையறைகளில் அமைக்கப்படுகிறது.

பெரும்பாலும் ஈரப்பதமாகவே உள்ள பகுதி என்பதால் மற்ற இடங்களை விட அங்கு கூடுதலான பராமரிப்பு அவசியமானது.

சித்திர டைல்ஸ் வகைகள்

குளியலறை தரைத்தளம் வழுக்கும் தன்மை கொண்டதால், ஒன்றிரண்டு ‘ஆன்டி ஸ்கிட் மேட்’ வகைகளை போட்டு வைக்க வேண்டும். தகுந்த ஜன்னல்கள் இல்லாத அறையாக அமைக்கப்பட்ட நிலையில் காற்றோட்டத்துக்காக மேற்புற சுவரில் ‘எக்ஸாஸ்ட்’ மின் விசிறி அவசியம். ஜன்னல் ஓரங்களில், சிறிய இலைகள் கொண்ட செயற்கை கொடிகளை ‘பார்டர்’ போன்று அழகாக அமைக்கலாம். பாத்ரூம் டைல்ஸ் வகைகளில் குழந்தைகள் விரும்பும் சித்திரங்கள், படங்கள் கொண்ட டைல்ஸ்கள் கிடைக்கின்றன. அவற்றை பதிப்பதால் வீட்டில் உள்ள குட்டி பசங்கள் குஷியாகி விடுவார்கள்.

காற்று சுத்திகரிப்பு

குளியல் மற்றும் ‘வாஷிங்’ பணிகளை செய்து முடித்த பின்னர் தரைப்பகுதியை துடைத்து, உலர வைப்பது நல்லது. முதியவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு குளியலறை பராமரிப்பு மிக முக்கியமானது. குளியலறைக்குள் ‘ஏர் பிரஷ்னர்’ வைப்பதன் மூலம் அதன் பயன்பாட்டில் இலகுவான தன்மையை உணர இயலும் என்று உள்கட்டமைப்பு வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நவீன அலமாரி

குளியலறை சிறியதாக இருந்தாலும் குளியல் சோப், துணி துவைக்கும் சோப் முதல் ஷாம்பூ, சீயக்காய், டவல், சீப்பு போன்ற அவசியமான பொருட்களை கச்சிதமாக அடுக்கி வைக்கும் வகையில் கச்சிதமான ‘கார்னர் ஷெல்ப்’ பொருத்திக்கொள்ளலாம். தற்போது, மேல்பாகத்தில் கண்ணாடி, கீழ்பாகத்தில் ‘வாஷ்பேஸின்’ மற்றும் ‘கேபினட்’ கொண்ட அமைப்பு தற்போது பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ‘பிளாஸ்டிக் பாக்ஸ்’ போன்ற ‘ரெடிமேடு’ அலமாரிகள் தற்போது சந்தையில் கிடைப்பதால், இடத்திற்கு ஏற்ப அவற்றை வைத்துக் கொள்ளலாம். குளியலறையில் சிமெண்டு ‘ஸ்லாப்’ இருந்தால் அவற்றை ‘பிளைவுட்’ மூலம் மூடி அலமாரியாக மாற்றிக்கொள்ளலாம்.

நிறத்திற்கு ஏற்ற பொருட்கள்

‘டவல் ஹோல்டர்’ பொதுவாக வாஷ்பேஸின் அருகில் பொருத்தப்படுவது வழக்கம். ‘வாஷ்பேஸின்’, ‘ஹேண்ட் ஷவர்’ போன்றவற்றை சுவரின் பெயிண்டிங்கிற்கு பொருத்தமாக உள்ளவாறு தேர்ந்தெடுக்கலாம். ‘வாஷ்பேஸின் கேபினட்’ அமைப்பில் குளியல் பொருட்கள், ‘கிரீம்கள்’ போன்றவற்றை வைக்கலாம். குறிப்பாக, ‘அட்டாச்டு பாத்ருமில்’ பாக்டீரியாக்கள் பரவாமல் தடுக்கும் வகையிலான ‘கிளனிங்’ பொருட்கள் வைத்திருப்பது அவசியம். குளியலறை கதவின் உட்புறம் ‘ஹேங்கர்’ அல்லது ‘வால் ஸ்டிக்கர்’ பொருத்திக்கொள்ளலாம்.

வெளியூர் செல்லும்போது..

தொடர்ச்சியாக, 4 நாட்களுக்கு மேல் வெளியூர் செல்லும் நிலையில், குளியலறை ஜன்னல்கள் மூடி வைக்கும் பொழுது அங்கு பூஞ்சைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே, ஊருக்கு போகும் முன்னர் குளியலறையில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அங்குள்ள பக்கெட்களை குப்புற கவிழ்த்து வைத்து வைப்பதுடன், ‘ஏர் பிரஷ்னர்’ வைத்துச் செல்வது நல்லது. 

Next Story