கான்கிரீட் தயாரிப்பில் ‘பிளாஸ்டிக்’ பயன்பாடு
கான்கிரீட் தயாரிப்பில் சிமெண்டு பயன்பாட்டை தவிர்க்க பல உலக நாடுகளில் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பாலிமர் அடிப்படையிலான பிளாஸ்டிக் மூலம் கான்கிரீட் தயாரிப்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இன்றைய காலகட்டத்தில் கான்கிரீட் தயாரிப்பு முறைகளில் மாற்று சாத்தியங்களை கண்டுபிடிப்பதில் உலக அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பாலிமர் அடிப்படையிலான பிளாஸ்டிக் மூலம் தயரிக்கப்படும் பி.பி.சி (Perforated Plastic Concrete or Polymer Cement Concrete P.P.C) அல்லது பி.எம்.சி (Polymer Modified Concrete P.M.C) என்ற கான்கிரீட் தயாரிப்பு பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
இவ்வகை பி.பி.சி கான்கிரீட் தயாரிப்பில் ஜல்லி கற்கள் 1200 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சூடாக்கப்படுகின்றன. அப்போது பிளாஸ்டிக் கழிவுகள் (Thermo Setting Resins) அவற்றில் இடப்படும். அந்த நிலையில் உருகிய பிளாஸ்டிக் கலவை ஜல்லிகளின் மேற்புறத்தில் நன்றாக ஒட்டிக்கொள்ளும். அந்த கலவை தகுந்த அளவிலான அச்சுக்களில் ஊற்றப்பட்டு, பிளாக்குகளாக உருவாக்கப்படும்.
மேற்கண்ட செயல் முறையில் பிளாஸ்டிக் உருகும்போது நச்சு வாயுக்கள் எதுவும் வெளியாவதில்லை என்றும் அறியப்பட்டிருக்கிறது. ‘தெர்மோ செட்டிங் ரெஸின்’ அல்லது பிளாஸ்டிக், ஜல்லிகளை ஒன்றோடு ஒன்று இறுக்கிப் பிடிக்கும் தன்மை கொண்டவை. அதனால், பி.பி.சி பிளாக்குகள் உறுதியாக இருக்கும். அவற்றை தண்ணீருக்குள் இரு நாட்கள் மூழ்கி இருக்கும்படி வைக்கப்படும். அதன் மூலம், ‘ரெஸின்’ அல்லது பிளாஸ்டிக் மேற்பூச்சு உரிந்து வராமல் நன்றாக ஒட்டிக் கொள்ளும். அந்த நிலையில் ஜல்லிகள் மற்றும் பிளாஸ்டிக் மேற்பூச்சு ஆகியவற்றுக்கு இடையில் வெற்றிடங்கள் இருக்கும்.
அவை, சுவர்களுக்குள் நடைபெறும் காற்றோட்டத்திற்கு உதவியாக அமையும். அதாவது, பிளாஸ்டிக் கலவைப் பூச்சுக்குள் உருவான துளைகள், நல்ல பிடிமானமும், சுவர்களுக்கான சுவாசமும் கொண்ட கட்டுமானத்தை அமைக்கிறது. இந்த பி.பி.சி வகை கான்கிரீட் கலவையை சாலைகள் அமைக்கவும் பயன்படுத்தலாம் என்றும் அறியப்பட்டுள்ளது. அதனால் சாலைகள் தரமாகவும், உறுதியாகவும் இருப்பது ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story