செல்லப்பிராணிகள் வசிப்பிடம் அமைக்க ஏற்ற பகுதிகள்


செல்லப்பிராணிகள் வசிப்பிடம் அமைக்க ஏற்ற பகுதிகள்
x
தினத்தந்தி 25 Jan 2020 5:49 PM IST (Updated: 25 Jan 2020 5:49 PM IST)
t-max-icont-min-icon

தனி வீடுகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றில் செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனை ஆகியவற்றை வளர்ப்பது பலரது வழக்கமாக இருந்து வருகிறது.

பொதுவாக, கிழக்கில் ‘மெயின் கேட்’ அமைந்துள்ள வீடுகளில் செல்லப் பிராணிகளுக்கான சிறிய குடில்களை கிழக்கு பக்கத்தில் உள்ள வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய திசைகளில் அமைத்து பலரும் வளர்த்து வருகிறார்கள்.

வாஸ்து ரீதியாக பொருத்தமான இடம்

செல்லப் பிராணிகளை வைத்து பராமரிப்பதற்கு, வாஸ்து சாஸ்திர ரீதியாக சரியான இடமாக குறிப்பிடப்படுவது மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் ஆகும். நான்கு திசைகளில் எந்த திசையில் தலைவாசல் அமைப்பு இருந்தாலும், இந்த இரு பகுதிகளும் செல்லப் பிராணிகளுக்கு ஏற்ற பகுதியாக அமைகின்றன. அதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டாக கோவில்களில் உள்ள யானை கட்டும் இடம், பசுக்களின் கோசாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ள இடங்களை சொல்லலாம்.

கச்சிதமான தேர்வு அவசியம்

செல்லப் பிராணிகளை மேற்கு, வடமேற்கு பகுதிகளில் சிறிய அறை அமைத்து பராமரிப்பதே சரியான முறையாகும். அதற்கு மாறாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு அறைகளில் பராமரித்தால் அவை அடிக்கடி நோய் வாய்ப்படும் நிலை ஏற்படலாம் என்று வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சரியான இடம்

ஈசானிய பகுதியான வடகிழக்கில் செல்லப் பிராணிகளை பராமரிப்பது அவற்றை பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, வடகிழக்கு என்பது மனையில் பரவும் சக்தி அலைகளுக்கு ஆதார இடமாக சொல்லப்பட்டுள்ளது. அங்கிருந்து வீட்டின் மற்ற பகுதிகளுக்கும் சக்தி பரவுகிறது. அதன் காரணமாக, செல்லப்பிராணிகளின் இயல்பு நிலை மாறி விடக்கூடும். அதனால், மேற்கு மற்றும் வடமேற்கு ஆகிய பகுதிகளில் வீட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகளைப் பராமரித்து வருவதே பாதுகாப்பானது என்றும் வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்னர்.

பாதுகாப்பான குடில்

மேல்நாடுகளில் வீட்டு விலங்குகளுக்கான குடில் அமைத்துத் தருவதற்கு தனிப்பட்ட ஆர்க்கிடெக்டுகள் இருக்கிறார்கள். வீடு போன்ற சிறிய அளவு கொண்ட ‘மினியேச்சர்’ மாடலை அவர்கள் வடிவமைத்து, வீட்டின் முன் பகுதியில் வைத்து, வளர்ப்புப் பிராணிகளை பராமரித்து வருகிறார்கள். நாம் அவ்வளவு பெரிதாக செய்யாவிட்டாலும், அட்டைப்பெட்டிகள், கார்டுபோர்டு அட்டைகள், பழைய பிளாஸ்டிக் தொட்டிகள், பிளாஸ்டிக் பெட்டிகள் ஆகியவற்றை பயன்படுத்தியும் செல்லப் பிராணிகளுக்கு சிறிய குடில் அமைக்கலாம். வெயில் அல்லது குளிர் ஆகியவற்றால் பாதிக்காமல் இருக்க அதன் உட்புறத்தில் ‘தெர்மாக்கோல்’ ஒட்டி வைக்கலாம். 

Next Story