‘பிரிட்ஜ் லோன்’ கடன் வசதி


‘பிரிட்ஜ் லோன்’ கடன் வசதி
x
தினத்தந்தி 25 Jan 2020 12:31 PM GMT (Updated: 25 Jan 2020 12:31 PM GMT)

தற்போது குடியிருக்கும் தனது வீட்டை விற்பனை செய்து விட்டு, அதை விட பெரிய வீட்டை வாங்கி குடியேற திட்டமிடும் நிலையில், புதிய வீடு வாங்குவதற்கு பணம் போதுமானதாக இல்லை என்ற அடிப்படையில், வங்கிகள் அளிக்கும் குறுகிய கால கடன் திட்டம் ‘பிரிட்ஜ் லோன்’ (ஹோம் ஷார்ட் டெர்ம் பிரிட்ஜ் லோன்) ஆகும்.

வாங்க திட்டமிட்டுள்ள புது வீட்டின் சந்தை மதிப்பில் 80 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரையில் கடன் தொகை கிடைக்கும். இதில் வழக்கமான வீட்டு கடன் வட்டி விகிதத்தை விட கொஞ்சம் கூடுதலாக இருக்கலாம்.

 வாடிக்கையாளர் அவரது பழைய வீட்டை 2 வருடங்களுக்குள் விற்பனை செய்துவிட்டு, புது வீட்டுக்கான கடன் தொகையை திருப்பி செலுத்தும் வகையில் இக்கடன் வழங்கப்படுகிறது. 

வசதிகளுக்கேற்ப நகரின் வேறு பகுதியில் புதிய வீடு வாங்கி குடியேற விரும்புபவர்களுக்கு இந்த கடன் திட்டம் ஏற்றது. 

Next Story