பாரம்பரிய கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்ட சுவர் மேற்பூச்சு


பாரம்பரிய கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்ட சுவர் மேற்பூச்சு
x
தினத்தந்தி 1 Feb 2020 9:56 AM GMT (Updated: 1 Feb 2020 9:56 AM GMT)

நமது பகுதிகளில் வழக்கத்தில் இருந்து வந்த பாரம்பரிய மரபுசார் கட்டுமான முறைகள் வெயில் மற்றும் குளிர் ஆகிய புறச்சூழ்நிலைகளின் தாக்கம் வீடுகளுக்குள் பரவாமல் தடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டதாக அறியப்பட்டுள்ளது.

மது பகுதிகளில் வழக்கத்தில் இருந்து வந்த பாரம்பரிய மரபுசார் கட்டுமான முறைகள் வெயில் மற்றும் குளிர் ஆகிய புறச்சூழ்நிலைகளின் தாக்கம் வீடுகளுக்குள் பரவாமல் தடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டதாக அறியப்பட்டுள்ளது. அந்த வகையில் மேல் மாடிகளின் தளத்தில் விழும் வெயில் காரணமாக வீடுகளுக்குள் வெப்பம் பரவாமல் தடுக்க தட்டை ஓடுகள் பதிக்கப்படுவது வழக்கம். அந்த ஓடுகளை பதிப்பதற்காக தயார் செய்யப்படும் கலவையில் கடுக்காய், கருப்பட்டி, பதநீர் போன்றவை அடங்கியிருக்கும். இயற்கை பொருட்களின் கலவை மேற்பகுதியில் பூசப்படுவதால், வெப்ப மண்டல பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெப்ப அலைகள் நுழைவது தடுக்கப்படு கிறது.

தற்போது சந்தையில் கிடைக்கும் நவீன வெப்பத் தடுப்பு ஓடுகள் அல்லது டைல்ஸ் வகைகளை பதிப்பதன் மூலமும் கான்கிரீட் வீடுகளுக்குள் நிலவும் வெப்ப அலைகளின் தாக்கத்தை குறைக்க இயலும் என்பது கவனிக்கத்தக்கது. நமது பாரம்பரிய கட்டுமான மரபுத் தொழில்நுட்பத்தில் சுவர்களின் மேற்பூச்சுக்கு கையாளப்பட்ட வழிமுறையில் உள்ள விஷேசமான அம்சத்தை இங்கே காணலாம்.

மேற்பூச்சுக்கான பொருட்கள்

செங்கல், களிமண் அல்லது கருங்கல் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட சுவருக்கு சுண்ணாம்பு காரை கொண்டு மேற்பூச்சு அளிக்கப்படும். பின்னர், அதன் மீது சுண்ணாம்பு பால், கடுக்காய், பதநீர், முட்டை வெள்ளைக்கரு ஆகியவற்றைக் சேர்த்துக் கலந்த கலவை மூலம் தேய்த்து விடப்படும். அதன் பின்னர், சுண்ணாம்பு பால் உலர்ந்தவுடன், மீண்டும் காரைக்கரண்டி கொண்டு சுவர் அழுத்தமாக தேய்த்து விடப்படும்.

பளபளப்பான சுவர் பரப்பு

அதன் பின்னர் மீண்டும், ‘குவார்ட்ஸ்’ படிகக் கல்லின் வழவழப்பான பகுதி கொண்டு சுவர்கள் அழுத்தமாக தேய்த்து விடப்படும். இந்த முறைகளின் மூலம் சுவர்கள் பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் பளபளப்பாகவும், வேறு மேற்பூச்சுகள் உள்ளிட்ட ‘பெயிண்டிங்’ தேவைப்படாத சுவராகவும் நீடித்து நிற்கின்றன. அத்தகைய வீடுகள் இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருப்பது தெரிய வந்துள்ளது.

Next Story