‘செராமிக்’ கழிவுகள் மூலம் கான்கிரீட் தயாரிப்பு


‘செராமிக்’   கழிவுகள்   மூலம்   கான்கிரீட்   தயாரிப்பு
x
தினத்தந்தி 7 Feb 2020 10:30 PM GMT (Updated: 7 Feb 2020 12:07 PM GMT)

வீட்டு உபயோக பொருட்களில் பழைய காலம் முதலாகவே பழக்கத்தில் இருந்து வரும் பொருட்களில் பீங்கான் என்ற ‘செராமிக்’ வகை முக்கியமான இடத்தில் உள்ளது.

வீட்டு உபயோக பொருட்களில் பழைய காலம் முதலாகவே பழக்கத்தில் இருந்து வரும் பொருட்களில் பீங்கான் என்ற ‘செராமிக்’ வகை முக்கியமான இடத்தில் உள்ளது. நமது நாட்டில் ‘செராமிக்’ பொருட்கள் உற்பத்தி உலக அளவில் 8–வது இடத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட லட்சக்கணக்கான டன் பீங்கான் உற்பத்தி செய்யப்படும் நிலையில் சுமார் 10 முதல் 30 சதவிகிதம் கழிவுப் பொருட்களாக மீதம் ஆகின்றன. 

மறு சுழற்சி செய்யப்பட்ட ‘செராமிக்’

சிலிகா, அலுமினியம், இரும்பு ஆக்ஸைடு, கால்சியம் ஆக்ஸைடு போன்ற தாதுக்கள் பீங்கானில் கலந்திருப்பதால், கான்கிரீட் தயாரிப்பில் ஜல்லிகளுக்கு பதிலாக (சிமீக்ஷீணீனீவீநீ கீணீstமீ கிரீரீக்ஷீமீரீணீtமீ – சிகீகி) மறு சுழற்சி செய்யப்பட்ட செராமிக் கழிவுகளை பயன்படுத்த இயலுமா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் பல்கலைக்கழக கட்டுமான பொறியியல் துறை வல்லுனர்கள் அளித்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம்.

சோதனை அடிப்படையில், வழக்கமான கருங்கல் ஜல்லி கான்கிரீட் மற்றும் பீங்கான் ஜல்லி கான்கிரீட் ஆகிய இரு வகை கான்கிரீட் தயார் செய்யப்பட்டு, கன செவ்வகம், உருளை மற்றும் பீம் ஆகிய வடிவங்களில் அமைக்கப்பட்டன. கிட்டத்தட்ட 4 வாரங்கள் கழித்து அவற்றின் உறுதி பற்றிய ஒப்பீட்டு சோதனைகள் செய்யப்பட்டன.  

மூன்று கட்ட சோதனைகள்

உறுதியை நிர்ணயிக்கும் முதலாவது பரிசோதனையில் கருங்கல் ஜல்லி கான்கிரீட்டை விடவும், பீங்கான் கழிவு ஜல்லி கான்கிரீட் குறிப்பிட்ட அளவு கூடுதல் உறுதியாக இருப்பது அறியப்பட்டது. 

இரண்டாம் கட்ட சோதனையாக ஹைட்ரோ குளோரைடு திரவத்தில் 4 வாரங்கள் அமிழ்த்தி வைக்கப்பட்டு அதன் தரநிலை மாற்றம் குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டன. இரு கான்கிரீட் வகைகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ரசாயன மாற்றங்கள் மற்றும் எடை குறைவு போன்ற முடிவுகள் கிடைத்தன.

மூன்றாம் நிலை சோதனையாக 250 டிகிரி வெப்ப நிலையில் சுமார் 5 நாட்கள் வைக்கப்பட்டு, அதில் உருவாகும் மாற்றங்கள் பரிசோதனை செய்யப்பட்டதில் பாதிப்பு அல்லது சேதம் எதுவும் ஏற்படாதது கண்டறியப்பட்டது. 

திருப்திகரமான முடிவுகள்

கருங்கல் ஜல்லிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட கான்கிரீட் போல பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பீங்கான் ஜல்லி கான்கிரீட்டின் உறுதி மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை திருப்திகரமான முடிவுகளை அளித்துள்ளன. அதன் அடிப்படையில் கான்கிரீட் தயாரிப்பில் பீங்கான் என்ற ‘செராமிக்’ ஜல்லியை பயன்படுத்தலாம் என்று கட்டுமானத்துறை வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.

Next Story