கண்களை கவரும் வகையில் அமைந்த விண்ணை தொடும் கட்டிடங்கள்


கண்களை  கவரும்  வகையில்  அமைந்த விண்ணை  தொடும்  கட்டிடங்கள்
x
தினத்தந்தி 7 Feb 2020 11:00 PM GMT (Updated: 7 Feb 2020 12:33 PM GMT)

உயரமான கட்டிடங்களை ‘ஹை ரைஸ் பில்டிங்’மற்றும் ‘ஸ்கை கிராப்பர்’ என்று இரு வகைகளாக குறிப்பிடப்படுகின்றன.

யரமான கட்டிடங்களை ‘ஹை ரைஸ் பில்டிங்’மற்றும் ‘ஸ்கை கிராப்பர்’  என்று இரு வகைகளாக குறிப்பிடப்படுகின்றன. ஜெர்மனியில் அமைந்துள்ள ‘தி எம்போரிஸ் ஸ்டாண்டர்ட்ஸ் கமிட்டி’  என்ற அமைப்பு, 115 அடி முதல் 328 அடி வரை உயரமும், 12 முதல் 39 தளங்கள் வரையும் அமைந்துள்ள கட்டிடங்கள் ‘ஸ்கை கிராப்பர்’ என்றும், 330 அடிகளுக்கும் மேல் உயரம் கொண்ட கட்டிடங்கள் ‘ஸ்கை கிராப்பர்’ என்றும் வரையறை செய்துள்ளது.

பல்வேறு உலக நாடுகள்

விண்ணை தொடும் ‘ஸ்கை கிராப்பர்ஸ்’ கட்டிடங்களை அமைப்பதில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உலக அளவில் முன்னணியில் இருந்து வருகின்றன. தற்போது, அவற்றின் வரிசையில் ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளும் இணைந்துள்ளன.

சர்வதேச அமைப்பின் அறிக்கை

கடந்த ஆண்டுகளை விடவும் 2019–ம் ஆண்டில்தான் விண்ணை தொடும் உயரமான கட்டிடங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த செய்தியை ‘சிகாகோ’ நகரில் இயங்கி வரும் ‘கவுன்சில் ஆன் டால் பில்டிங்ஸ் அன்டு அர்பன் ஹேபிடேட்’   என்ற அமைப்பு தனது வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  கடந்த காலங்களை ஒப்பிடும்போது, 2019–ம் ஆண்டில்தான் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 300 மீட்டர் (சுமார் 984 அடி) அல்லது அதற்கும் அதிகமான உயரம் கொண்டதாக கிட்டத்தட்ட 26 விண்ணை தொடும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2018–ம் ஆண்டில், அதுபோன்ற 18 கட்டிடங்கள் மட்டுமே கட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகின் உயரமான கட்டிடங்கள்

வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் தலைநகரான ‘அல்ஜையர்ஸ்’ நகரில் கிட்டத்தட்ட 870 அடி உயரமுள்ள கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென்னாப்பிரிக்க அளவில் இரண்டாவது உயரமான கட்டிடமாக ‘தி லியனார்டோ’ என்ற ஓட்டல் இணைந்த அபார்ட்மெண்டு கட்டிடம் ‘ஜோஹன்னஸ்பெர்க்’ நகரில் அமைந்துள்ளது. இது சுமார் 745 அடி உயரம் கொண்டதாகும். 

சீனா கடந்த 2019–ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 655 அடிகளுக்கும் மேலான 57 விண் முட்டும் கட்டிடங்களை அமைத்து உலக அளவில் முதலாவதாக திகழ்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 14 கட்டிடங்களும், வட அமெரிக்க நாட்டில் 20 கட்டிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளின் வரிசையில் துபாய் 9 விண்ணை தொடும் கட்டிடங்களை அமைத்துள்ளது. 

சிஜிஙிஹிபி அமைப்பின் கணிப்பின்படி, உலக அளவில் நடப்பு ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 650 அடிகளுக்கும் மேற்பட்ட 30 கட்டிடங்கள் அமைக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக, அவற்றில் ஆயிரம் அடிகளுக்கும் மேற்பட்ட உயரம் கொண்ட 17 கட்டிடங்கள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 

இந்திய அளவில் உயரமான கட்டிடங்கள்

தேசிய அளவில் உயர்ந்த கட்டிடங்களுக்கான ‘டாப் டென்’ வரிசையில் முதலாவது இடத்தில், மும்பையின் ‘பாலைஸ் ராயல்’ என்ற கட்டிடம் இடம் பெற உள்ளது. அது 120 அடுக்கு மாடிகளுடன் 1050 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது. அதன் கட்டுமான பணிகள் நடப்பு ஆண்டில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள ‘தி 42’ என்ற கட்டிடம் கொல்கத்தாவில் 65 தளங்களுடன் 853 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் மும்பையில் அமைந்துள்ள ‘இம்பீரியல் டவர்ஸ்’ என்ற இரட்டை குடியிருப்பு கட்டிடங்கள் கிட்டத்தட்ட 840 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.

 சென்னையின் உயரமான கட்டிடம்

குடியிருப்பு சென்னையின் உயரமான கட்டிடமாகும். இது 45 மாடிகளுடன் 528 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பு தென்னிந்திய அளவில் உயரமான கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story