மனம் கவரும் மாடிப்படிகள் கட்டமைப்பு
சொந்தமாக வீடு கட்டுபவர்கள் கவனமாக செய்ய வேண்டிய விஷயங்களில் குறிப்பிடத்தக்க விஷயம் மாடிப்படிகள் ஆகும். குடும்ப அங்கத்தினர்கள், அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடும் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் சவுகரியமாக ஏறி, இறங்கும் வகையில் அவை அமைக்கப்பட வேண்டும்.
இட நெருக்கடி கொண்ட நகர்ப்புற சூழலில் அறைகள் அமைக்கவே போதுமான இடம் இல்லை என்ற நிலையில் மாடிப்படிகள் குறுகிய கட்டமைப்பாக பல இடங்களில் அமைக்கப்படுகின்றன என்று சிவில் பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கூடுதலான அகலம்
படிக்கட்டுகள் அமைக்கப்படும்போது அதன் உயரத்தை விட, அகலம்தான் கூடுதலாக இருக்கவேண்டும். அதாவது, படிகளுக்கான உயரம் குறைவாகவும், கால் வைக்கும் பகுதி அகலமாகவும் இருப்பது சரியான முறை. அவ்வாறு இருந்தால்தான் குழந்தைகள் மற்றும் முதியோர் எளிதாக ஏறி, இறங்க வசதியாக இருக்கும். எதிர்பாராத நிலையில் கால் வழுக்கினால்கூட பக்கவாட்டு கைப்பிடி சுவரை பிடித்துச் சமாளித்துக்கொள்ள முடியும். படிகள் ஒவ்வொன்றுக்கும் மத்தியில் சம அளவு இடைவெளி இருக்க வேண்டும்.
கச்சிதமான ‘கார்ப்பெட்’
படிகளின் மீது ‘கார்ப்பெட்’ போட விரும்பினால் படிக்கட்டுகளை சரியாக அளவெடுத்து, அதற்கேற்ப தேர்வு செய்ய வேண்டும். ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ தக்க பிடிப்பு உள்ளதாகவும், கடினமான மேற்பரப்பு கொண்டதாகவும் ‘கார்ப்பெட்’ இருக்கவேண்டும். படியுடன் கச்சிதமாகப் பதிந்து இருப்பது முக்கியம். ‘கார்ப்பெட்’ போடப்பட்ட பின்னர் படிகளின் முனைகள் கூர்மையாக இருக்கக்கூடாது.
‘வுட் புளோரிங்’
‘பாலிஷ்’ செய்யப்பட்ட கான்கிரீட் படிக்கட்டுகள் தற்போது பல இடங்களில் அமைக்கப்படுகின்றன. மரத்தால் அமைக்கப்படும் படிக்கட்டுகள் கூடுதலான பட்ஜெட் கொண்டதாக இருக்கும். அதனால், மரம் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் பொருத்தமான ‘வுட் புளோரிங்’ செய்து கொள்ளலாம். பக்கவாட்டு கைப்படி அமைப்பை மரத்தில் அமைத்துக்கொண்டால், பிடித்துக்கொள்ள வசதியாகவும், அழகாகவும் இருக்கும். கச்சிதமான உயரத்தில் அதை அமைத்துக்கொள்வது அவசியம்.
Related Tags :
Next Story