கட்டுமான பணிகளில் பொறியாளரின் முக்கியத்துவம்


கட்டுமான பணிகளில் பொறியாளரின் முக்கியத்துவம்
x
தினத்தந்தி 22 Feb 2021 10:45 PM GMT (Updated: 20 Feb 2021 1:36 PM GMT)

கட்டுமான அமைப்புகள் எந்த வகைப்பட்டதாக இருந்தாலும் அவற்றை அமைக்க அனுபவம் உள்ள பொறியாளர் அவசியம்.

அவரது ஆலோசனையின் பேரில் கட்டிட வரைபடம் உரிமையாளருடைய விருப்பம், தற்போதைய மற்றும் எதிர்கால தேவை ஆகியவற்றை கருத்தில்கொண்டு இன்றைய நவீன காலத்திற்கும், அரசு விதிகளுக்கும், வாஸ்து சாஸ்திர ரீதியாகவும் மனையின் நீள அகலம் ஆகியவை மற்றும் அந்தப்பகுதி நில அமைப்பு மற்றும் பிற்கால வளர்ச்சியையும் அடங்கும் வடிவத்தில் வரைபடம் தயாரித்து அளிப்பார். ஒரு கட்டிடத்தில் ஸ்ட்ரக்சுரல் டிசைன் (structural design) செய்து உறுதி, பாதுகாப்பு மற்றும் செலவு குறைவான கட்டுமான திட்ட அமைப்பை கொடுப்பதும் அவரது பணியாகும். மேலும், கட்டிட வரைபடம் அதன் பயன்பாடு, அங்குள்ள மண்ணின் தரம் அனைத்தையும் கருத்தில்கொண்டு வடிவமைப்பு கணக்கீடு செய்து ஸ்ட்ரக்சுரல் வரைபடமும் உருவாக் கப்படும்.

ஒரு கட்டிடத்தை கட்டிமுடிக்க தேவையான பணியாளர்கள்,கட்டுமான பொருட்கள், உபகரணங்கள் எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கீடு செய்து திட்டத்தின் மொத்தசெலவு தொகை எவ்வளவு என்றும், சம்பந்தப்பட்ட கட்டிடத்தை கட்டி முடிக்க எவ்வளவு நாட்கள் தேவை, எப்பொழுது, எவ்வளவு, என்ன பொருட்கள் தேவை என்பதையும் பொறியாளர் கணக்கீடு செய்வார். கட்டிட வேலை தொடங்கவும், தொடங்கியபின் வேலையை வழிநடத்தவும், வரைபடத்தில் உள்ளதை திட்டத்தின் செலவு தொகையில் மாற்றம் இல்லாமல் கட்டுமான வேலையை பூர்த்தி செய்யவும், வேலைகளுக்கு இடையில் ஏற்படும் சிறுசிறு மாறுதல்கள் மற்றும் இடர்ப்பாடுகளை சரிசெய்வதும் பொறியாளரது முக்கிய பணியாகும்.

தரமான பொருட்களை தேவையான அளவு வாங்கவும்,அந்த பொருட்களை சரியாக கொண்டுவந்து சேர்ப்பது, வரைபடத்தின்படி மனையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் சரியாகவும், நேர்த்தியாகவும், பணியாளர்களுக்கும், கட்டிட உரிமையாளருக்கும் நல்ல தொடர்பை உருவாக்கி, கட்டுமான முறைகளில் புதிய பொருட்களையும், முறைகளையும் கடைபிடித்து பணிகளை நிறைவு செய்வதும் ஒரு பொறியாளருடைய பொறுப்பாக அமைகிறது.

Next Story